ஊத்துமலை அருகே தொழிலாளி கழுத்தறுத்து தற்கொலை
1 min read
A worker committed suicide by hanging himself near Uthumalai
11.9.2024
தென்காசி மாவட்டம் ஊத்துமலை போலீஸ் சரகம் மறுக்காலங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் முக்கையா (வயது 59) இவரது மகன் கிருஷ்ணசாமி (வயது 34) இவருக்கு திருமணம் ஆகவில்லை பல்வேறு இடங்களில் பெண் பார்க்கும் பெண் அமையவில்லை இதனால் மனம் உடைந்து அடிக்கடி மது குடித்துவிட்டு தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் அளவுக்கு அதிகமாக குடித்துவிட்ட கிருஷ்ணசாமி குடிபோதையில் வீட்டுக்கு வந்துள்ளார். அந்த நேரத்தில் வீட்டில் யாரும் இல்லாததால் உள் பக்கமாக கதவை பூட்டி கொண்டார். அதன் பின் சமையலறையில் இருந்த கழுத்தை தானே அறுத்துக் கொண்டார். இதில் ரத்தம் வெளியேறவே நிலை குலைந்து வீட்டுக்குள் மயங்கி விழுந்தார்.
சிறிது நேரத்தில் அவரது உறவினர்கள் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருப்பதை பார்த்து சந்தேகம் அடைந்தனர் உடனே வீட்டின் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தபோது கிருஷ்ணசாமி ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததை பார்த்து கூச்சலிட்டனர். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து கதவை உடைத்து அவரை மீட்டனர்.
இதுகுறித்து ஊத்துமலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த கிருஷ்ணசாமியை மீட்டு சங்கரன் கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட கிருஷ்ணசாமி சிகிச்சை பலனின்றி இறந்தார். இது பற்றி ஊத்துமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.