June 5, 2026

Seithi Saral

Tamil News Channel

சங்கரன்கோவில்; அதிமுக நிர்வாகி கொலையில் 2 பேர் கைது

1 min read

Shankaran Temple; 2 people arrested in AIADMK executive’s murder

11.9.2024
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே அதிமுக நிர்வாகி கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இரண்டு பேர் கோயில் கொடை விழா மற்றும் திருமண விழாவில் முதல் மரியாதையை தடுத்ததால் அவரை வெட்டிக் கொன்றதாக போலீசாரிடம் வாக் குமூலம் அளித்துள்ளனர்.

சங்கரன்கோவில் அருகேஉள்ள மேலநீலிதநல்லூரைச் சேர்ந்த கிருஷ்ணசாமி மகன் வெளியப்பன் (வயது 49). அரசு ஒப்பந்ததாரரான இவர், அதிமுக மாவட்ட பிரதி நிதியாக இருந்தார். இவரது மனைவி மாரிச்செல்வி (வயது 45), மேலநீலிதநல்லூர் யூனியன் முன்னாள் துணை சேர்மனாக பதவி வகித்தார்.இவர்களுக்கு ஒரு மகள், 2 மகன்கள் உள்ளனர்.

கடந்த 8ம்தேதி காலை வெளியப்பன் மேலநீலிதநல்லூர் யூனியன் அலுவலகம் அருகே நடைபயிற்சி மேற் கொண்டிருந்தார். அப்போது அதேபகுதியைச் சேர்ந்த பாலமுருகன் உட்பட 5 பேர் கொண்ட கும்பல், அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பிச்சென்றது. இது குறித்து பனவடலிசத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த முத்துப்பாண்டி என்பவரது மகன் பாலமுருகன், வெள்ளத்துரை என்பவரது மகன் கெவேந்திரன் ஆகியோரை கைது செய்தனர். அவர்கள் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில், கோயில் கொடை மற்றும் திருமண விழாவில் எங்களுக்கு முதல் மரியாதை கிடைப்பதை தடுத்து வந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த நாங்கள் அவரை கொல்வதற்கு திட்டமிட்டோம். நாங்கள் அவர் எங்கு எல்லாம் சென்று வருகிறார், என்று ஒரு வாரம் நோட்டமிட்டு திட்ட மிட்டு, அதிமுக நிர்வாகியான வெளியப்பனை வெட்டிக் கொன்றோம் என வாக்கு மூலத்தில் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். இந்த வழக்கில் சந்தேகத்தின் பேரில் மேலும் 3 பேர்களை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *