இமானுவேல் சேகரன் நினைவு தினம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மரியாதை
1 min read
Emanuel Sekaran Memorial Day: Tribute to Minister Udayanidhi Stalin
11.9.2024
பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரனின் 67 வது ஆண்டு நினைவு நாள் ஆண்டுதோறும் அனுஷ்டிக்கப் படுகிறது.இந்தாண்டு இன்று பரமக்குடி சந்தைபேட்டை பின்புறம் அமைந்துள்ள தியாகி இமானுவேல் சேகரனின் நினைவிடத்தில் இமானுவேல் சேகரன் குடும்பத்தின் சார்பில் அவரது மகள் சுந்தரி பிரபாராணி, பேரன்கள் சக்கரவர்த்தி, சந்திரசேகர், ஜீவான்,ஆரோக்கிய கோமகன்,பேத்தி ரூபா மற்றும் உறவினர்கள் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
இமானுவேல் சேகரன் பிறந்த ஊரான பரமக்குடி அருகேயுள்ள செல்லூர் கிராம மக்கள் ஊராட்சி மன்றத் தலைவர் மகேஸ்வரி ஜீவன் செல்வராஜ் தலைமையிலும் மற்றும் பரமக்குடி தேவேந்திரர் பண்பாட்டு கழகத்தினர் தலைவர் பரம்பை பாலா,செயலாளர் புண்ணியமூர்த்தி, பொருளாளர் முருகேசன்ஆகியோர் தலைமையில் அமைப்பினர்கள் இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
தி.மு.க.சார்பில் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் ராஜகண்ணப்பன், கே.ஆர்.பெரியகருப்பன்,கயல்விழி செல்வராஜ், மூர்த்தி, சட்டமன்ற உறுப்பினர்கள் காதர்பாட்சா முத்துராமலிங்கம் (ராமநாதபுரம்) தமிழரசி (மானாமதுரை),செ. முருகேசன் (பரமக்குடி),முத்துராஜா (புதுக்கோட்டை), முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பவானி. ராஜேந்திரன் மற்றும் நிர்வாகிகள், பிரமுகர்கள் இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அதுசமயம்இமானுவேல் சேகரன் பிறந்த நாளை அரசு விழாவாக அறிவித்த தமிழ்நாடு அரசுக்கு மகள் சுந்தரி பிரபாராணி அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் நன்றி தெரிவித்து கொண்டார்.
டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன்,சட்டமன்ற உறுப்பினர்கள் செ.முருகேசன்(பரமக்குடி), கிருஷ்ணசாமி( பூவிருந்தவல்லி) ஆகியோர் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
அ.தி.மு.க.சார்பில் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்கட்சி துணை தலைவர் ஆர்பி.உதயகுமார்,மாநில மகளிரணி இணைச் செயலாளர் கீர்த்திகா முனியசாமி,முன்னாள் முன்னாள் அமைச்சர்கள் மணிகண்டன், ராஜலெட்சுமி,ராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் எம்.ஏ.முனியசாமி மற்றும் நிர்வாகிகள் இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
காங்கிரஸ் கட்சி சார்பில் மாநிலத் தலைவர் செல்வபெருந்தகை தலைமையில் கட்சியினர் இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
முன்னதாக நினைவிடம் வரும் வழியில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வபெருந்தகை மற்றும் கட்சியினரை தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், கட்சியினர் திரளாக வந்ததை தொடர்ந்து காவல் துறையினர் காங்கிரஸ் கட்சியினரை தடுத்து நிறுத்தினர்.
இதையடுத்து முன்னதாக மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் காவல் துறையினர் முறையான பாதுகாப்பு வழங்கினார்கள்.ஆனால் .ராமநாதபுரம் மாவட்டத்தில் எங்களுக்கு காவல் துறையினர் போதிய பாதுகாப்பு முறையாக வழங்கவில்லை என கூறி காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வபெருந்தகை மற்றும் கட்சியினர் திடீர் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்பு காவல் துறை அதிகாரிகள் சமரசப் படுத்தி நினைவிடத்திற்கு அனுப்பி வைத்தனர்.
ம.தி.மு.க. சார்பில் சட்டமன்ற உறுப்பினர்கள் புதூர் பூமிநாதன், சதன் திருமலைக் குமார்,தணிக்கை குழு உறுப்பினர் கே.ஏ.எம் குணசேகரன்,மாவட்டச் செயலாளர் சுரேஷ் மற்றும் கட்சியினர், ராமநாதபுரம் ராஜ்யசபா உறுப்பினர் தருமர் தலைமையில் ஒ.பன்னீர்செல்வம் மற்றும் நிர்வாகிகள், மற்றும்ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி,மள்ளர் கழகம் சுரேஷ் ஆகியோர் இமானுவேல் சேகரனார் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
புதிய தமிழகம் கட்சியின் சார்பில் நிறுவனத் தலைவர் மருத்துவர் கிருஷ்ணசாமி,தமிழகம் மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் தலைவர் ஜான்பாண்டியன்,நாம் தமிழர் கட்சி சார்பில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அரசியல் கட்சியினர்,தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சமுதாய மக்கள் இமானுவேல் சேகரனார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.மேலும் திரளான சமுதாய பெண்கள் முளைப்பாரி மற்றும் பால்குடம் எடுத்து வந்து நினைவிடத்தில் செலுத்தினர்.
இமானுவேல் சேகரனார் நினைவு நாளை முன்னிட்டு பரமக்குடி காவல் துறையினரின் வளைய்த்திற்குள் கொண்டு வரப்பட்டு பரமக்குடியில் காவல் துறை சட்டம் ஒழுங்கு கூடுதல் இயக்குநர் டேவிட்சன் தேவஆசீர்வாதம் தலைமையில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டனர்.மேலும் 150 சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள், ஆளில்லா கேமராக்கள் மூலம் காவல் துறையினர் கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.பரமக்குடி வழியாக இயக்கப்படும் அனைத்து போக்குவரத்துக்களும் நேற்று ஒருநாள் மாற்றுப் பாதையில் இயக்கப்பட்டன.