செங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் 10 மாதத்தில் 100 பிரசவம் பார்த்த பெண் மருத்துவர்
1 min read
A female doctor who saw 100 deliveries in 10 months at Sengotta Government Hospital
13.9.2024
தென்காசி மாவட்ட சுகாதார நலப்பணிகள் இயக்குனர் மருத்துவர் பிரேமலதா வழிகாட்டுதல் படி செங்கோட்டை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ராஜேஷ் கண்ணன் தலைமையின் கீழ் மகப்பேறு மருத்துவர் செல்வி. சுருதி பணியேற்ற பத்து மாதத்திற்குள் நேற்று 100வது பிரசவம் பார்த்து சிறந்த இலக்கை நிறைவு செய்துள்ளார் .
மகப்பேறு மருத்துவர் செல்வி சுருதி கடந்த 02.11.23 அன்று செங்கோட்டை அரசு மருத்துவமனையில் பணியில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத் தக்கது. அவருக்கு செங்கோட்டை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் அனைத்து பணியாளர்கள் சார்பாக பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டது.