தென்காசியில் கல்வி கடன் தொழில் கடன் வழங்கும் முகாம் – ஆட்சித் தலைவர் பங்கேற்பு
1 min readEducation Loan Industry Credit Camp in Tenkasi – Head of Government Participation
13.9.2024
தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மாவட்ட முன்னோடி வங்கி மற்றும் மாவட்ட தொழில் மையம் சார்பில் அனைத்து வங்கி கிளைகளின் மூலம் கல்விக்கடன் வழங்கும் முகாம் மற்றும் தொழில் முனைவோருக்கு கடன் உதவி வழங்கும் முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமையில் நடைபெற்றது.
தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மாவட்ட முன்னோடி வங்கி மற்றும் மாவட்ட தொழில் மையம், சார்பில் அனைத்து வங்கி கிளைகளின் மூலம் கல்விக்கடன் வழங்கும் முகாம் மற்றும் தொழில் முனைவோருக்கு கடன் உதவி வழங்கும் முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஏ.கே.கமல் கிஷோர், இ.ஆப அவர்கள் தலைமையில் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பழனி நாடார் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் .ஈராஜா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
இம்முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் எ.கே.கமல் கிஷோர் தெரிவித்ததாவது.
தென்காசி மாவட்டத்தில் இந்த ஆண்டு 10-வது மற்றும் 12-வது வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகள் உயர்கல்வி பயில்வதற்காக தேவைப்படும் கல்விக்கடனுக்காக மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் 27.8.2024 முதல் 4.9.2024 வரை வட்டார அளவில் முகாம்கள் நடத்தப்பட்டு விண்ணப்பங்கள் சேகரிக்கப்பட்டது.
தென்காசி மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிகளிலும் கல்விக்கடன் பெறுவது குறித்து மாணவ, மாணவிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டு வித்யாலெட்சுமி போர்டல் மற்றும் ஜன் சமர்த் போர்டல் மூலம் பெறப்பட்ட விண்ணப்பங்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டு இம்முகாமின் வாயிலாக 120 மாணவ, மாணவிகளுக்கு ரூ.515 கோடி கல்விக்கடன் வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் குறு. சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதற்காக இலக்கு 2024.25-ம் நிதியாண்டிற்கு ரூ. 2 லட்சத்து 78 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அதில் தென்காசி மாவட்டத்திற்கு கடன் இலக்காக ரூ.1809.86 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இம்முகாமில் சுயவேலைவாய்ப்பு திட்டங்கள் அதன் மூலம் பெறத்தக்க மானியங்கள், வங்கிகள் வழங்கும் கடன் வகைகள் அவற்றை பெறும் முறைகள் குறித்து விளக்கிக் கூறப்பட்டது.
இம்முகாமில், தென்காசி மாவட்ட தொழில் மைய இணை இயக்குநர் / பொது மேலாளர் மாரியம்மாள், முன்னோடி வங்கி மேலாளர், ஆ.கணேசன், இந்திய ரிசர்வ் வங்கி அலுவலர் ஆர்.இராதாகிருஷ்ணன், மண்டல மேலாளர், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, (திருநெல்வேலி) பாஸ்கரன், மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் ஆயிரப்பேரி தி.உதயகிருஷ்ணன், தென்காசி நகர்மன்ற தலைவர் ஆர்.சாதிர். தென்காசி ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர் .எம்.ஷேக் அப்துல்லா, ஒன்றியக்குழு துணைத்தலைவர் எம்.கனகராஜ் முத்துப்பாண்டியன். மற்றும் தென்காசி மாவட்ட குறு. சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன சங்கத் தலைவர் செ.அன்பழகன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள்
ஆகியோர் கலந்து கொண்டனர்.