பெருவில் பயங்கர காட்டுத்தீ: 15 பேர் பலி
1 min readWildfires kill 15 in Peru
17.9.2024
உலகின் மிகப்பெரிய வெப்பமண்டல மழைக்காடு அமேசான். தென் அமெரிக்காவின் பிரேசில், போலிவியா, கொலம்பியா, ஈக்குவடா, கயானா, பெரு, சுரிநாம், வெனிசுலா, பிரெஞ்சு கயானா ஆகிய நாடுகளில் அமேசான் காடுகள் பறந்து விரிந்துள்ளது.
இந்நிலையில், பெரு நாட்டில் உள்ள அமேசான் வனப்பகுதியில் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. காட்டுத்தீ அந்நாட்டின் பல்வேறு மாகாணங்களிலும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. காட்டுத்தீயை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஆனாலும், இந்த காட்டுத்தீயில் இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளதாக பெரு அரசு தெரிவித்துள்ளது. அமேசான் காட்டுத்தீயில் சிக்கி படுகாயமடைந்த 128 பேர் சிகிச்சைக்குபின் வீடுதிரும்பியுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. காட்டுத்தீ தொடர்ந்து பரவி வருவதால் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.