October 14, 2024

Seithi Saral

Tamil News Channel

பூமியை சுற்றும் புதிய மினி நிலவு கண்டுபிடிப்பு

1 min read

New Mini Moon Orbiting Earth Discovered

16/9/2024
பூமிக்கு இந்த வருடத்தில் தற்காலிகமாக மற்றொரு நிலவு கிடைக்கப்போகிறது என்ற தகவலை விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர். கடந்த ஆகஸ்ட் 7 ஆம் தேதி கண்டுபிடிக்கப்பட்ட 10 மீட்டர்கள் [33 அடி] உள்ள சிறு கோள் கண்டுபிடிக்கப்பட்டு அதற்கு Asteroid 2024 PT5 என்று பெயரிடப்பட்டது. இந்த சிறு கோள் ஆனது 2024 செப்டம்பர் 29 முதல் 2024 நவம்பர் 25 வரை பூமிக்கு சிறு நிலவாக செயல்பட உள்ளது.
இந்த குறுகிய காலக்கட்டத்திற்கு மட்டும் பூமியின் புவியீர்ப்பு விசையினால் ஈர்க்கப்பட்டு இந்த சிறு கொள் பூமியை சுற்றும். ஆனால் ஒரு முறை முழு சுற்றை நிறைவு செய்யும் முன்னரே [அதாவது நவம்பர் 25க்கு பின்னர்] பூமியின் புவியீர்ப்பு விசையில் இருந்து விடுபட்டு சூரியனை சுற்றத் துவங்கும்.

மிகவும் சிறிய அளவில் உள்ளதால் பூமியைச் சுற்றும் காலகட்டத்தில் இதை வெறும் கண்களால் பார்ப்பது சிரமம். ஆனால் இந்த காலகட்டத்தில் பூமிக்கும் பூமிக்கு அருகில் இருக்கும் பொருட்களுமான உறவை ஆய்வு செய்து புரிந்துகொள்ள உதவும் என்றும் என்றும் புவியீர்ப்பு அழுத்தங்கள் மற்றும் விசையினால் பூமிக்கு வெளியில் உள்ளவை எவ்வாறாக ரியாக்ட் செய்கிறது என்பதை அறிந்து கொள்ளவும் இந்த நிகழ்வு உதவும் என அமெரிக்கன் ஆஸ்ட்ரோனாமிகள் சொசைட்டி விஞ்ஞானிகள் தெரிவிகிண்டனர். முன்னதாக கடந்த 2022 ஆம் ஆண்டு NX1 என்ற சிறு நிலவு பூமியை சுற்றியது, குறிப்பிடத்தக்கது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.