October 14, 2024

Seithi Saral

Tamil News Channel

கனிமவள லாரிகளுக்கு இ – பாஸ் நடைமுறையை அமல்படுத்த கோரிக்கை

1 min read

E-pass procedure should be implemented for mineral trucks

15.9.2024
தமிழகத்திலிருந்து அண்டை மாநிலங்ககளுக்கு கனிம வளங்களை கொண்டு செல்ல கனிமவள வாகனங்களுக்கு
இ-பாஸ் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என்று தென்காசி மற்றும் அம்பாசமுத்திரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.ரவி அருணன் தமிழக முதலமைச்சருக்கு கோரிக்கை மனு ஒன்றை அனுப்பியுள்ளார்.

அந்தக் கோரிக்கை மனுவில் அவர் கூறி இருப்பதாவது:- தென்காசி மாவட்டத்திலிருந்து தினமும் பல்லாயிரக்கணக்கான கனரக வாகனங்களில் கேரள மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுகின்றன.

இதற்கான அனுமதி சீட்டு வழங்குவதில் பல்வேறு முறைகே டுகள் நடைபெற்று வருகிறது. தற்போது வெற்று அனுமதி சீட்டுகளே வழங்கப்பட்டு வருகிறது. புகையை காட்டினால் எழுத்துக்கள் அழியும் வகையில் ஒரு வித பேனாவை பயன்படுத்தி ஒரு அனுமதி சீட்டை வைத்து பல தடவைகள் கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுகிறது

கடந்த இரண்டு ஆண்டுகளாக போலி ஹாலோகிராம் ஸ்டிக்கர்கள் செய்தும் கனிமவளத் துறை உதவி இயக்குனரின் கையொப்பத்தை ரப்பர் ஸ்டாம்ப் மூலம் பயன்படுத்தி போலி அனுமதி சீட்டுகள் தயாரிக்கப்பட்டு சில குவாரிகளில் பயன்படுத்தப்படுவதாக செய்தி வெளியாகியிருக்கிறது

தென்காசி மாவட்டத்தில் புளியரை வழியாக கேரள மாநிலம் செல்லும் சாலை மலை வழிச்சாலை என்பதுடன் மிகவும் குறுகலான சாலையுமாகும் சில சமயம் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் குவியும் போது அந்தப் பகுதியில் மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது இதனால் அவசர
சிகிச்சைக்கு ஆம்புலன்ஸ் மூலம் திருவனந்தபுரம் மருத்துவமனை செல்வதற்கு வழியின்றி நோயாளிகள் மிகவும் இன்னல் படுகின்றனர். வெளிநாடுகளுக்குச் செல்லும் பலர் திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு செல்ல தாமதம் ஏற்பட்டு விமானத்தில் பயணிக்க முடியாமல் தவித்த பயணிகள் ஏராளம்

ஊட்டி கொடைக்கானல் போன்ற சுற்றுலா தலங்களில் வாகனங்களை கட்டுப்படுத்தவும் போக்குவரத்தை முறைப்படுத்தவும் சில மாதங்களுக்கு முன் தமிழக அரசு இ-பாஸ் நடைமுறையை செயல்படுத்தியது பல்வேறு தரப்பிலும் வரவேற்பை பெற்றது.

அதைப்போலவே தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு கனிம வளங்களை கொண்டு செல்லும் வாகனங்களுக்கும் தற்போதுள்ள நடைமுறையை மாற்றி க்யூ ஆர் கோட்டு டன் கூடிய இ- பாஸ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் இதன் மூலம் எத்தனை வாகனங்கள்? எவ்வளவு டன் கனிமங்களை கொண்டு செல்கிறது? எந்த ஊருக்கு? யாருக்கு கொண்டு செல்லப்படுகிறது? என்ற விவரங்களை துல்லியமாக அறிந்து கொள்ள முடியும்.

மேலும் இந்த நடைமுறையால் எந்த வித முறைகேடுகளுக்கும் இடமில்லாமல் போய்விடுவதால் அரசுக்கும் வருவாய் அதிகரிப்பு ஏற்படும். மேலும் இ- பாஸ்களில் பயண நேரம் குறிப்பிட்டு வழங்குவதன் மூலம் போக்குவரத்தையும் முறைப்படுத்தி நெரிசலை தவிர்க்க இயலும்

ஆகவே கனிம வள வாகனங்களுக்கு இ- பாஸ் கட்டாயம் என்ற நடைமுறையை உடனடியாக அமல்படுத்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் தங்களை பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்

ஏற்கெனவே கடந்த மே மாதம் 2 ஆம் தேதி இது குறித்து மனு ஒன்றையும் தங்களுக்கு அனுப்பியதையும் நினைவு கூற விரும்புகிறேன். இவ்வாறு அவர் அந்த கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்தக் கோரிக்கை மனுவின் நகலினை தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தமிழக அரசின் தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், வருவாய்த்துறை செயலாளர், இயற்கை வளங்கள் துறை செயலாளர், தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோருக்கும் அனுப்பியுள்ளார்

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.