தென்காசி, சென்னை உள்பட பல இடங்களில் ஆர்.எஸ்.எஸ். பேரணி
1 min readRSS in many places including Tenkasi and Chennai. Rally
6.10.2024
விஜயதசமியை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினர் நாடு முழுவதும் பேரணி நடத்துவது வழக்கம். அந்த வகையில் இன்று (அக்.,06) தமிழகத்தில் பேரணி நடக்கும் என அந்த அமைப்பு கூறியது. இதற்கு தமிழக போலீசார் அனுமதி வழங்கவில்லை. இதனை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்த பேரணிக்கு அனுமதி வழங்கும்படி போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனடிப்படையில் போலீசாரும் அனுமதி வழங்கினர்.
இதனையடுத்து திட்டமிட்டபடி தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் பேரணி நடந்தது.
சென்னை எழும்பூரில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்த பேரணியில் மத்திய அமைச்சர் எல்.முருகன் பங்கேற்றார்.
பெரம்பலூரில் நடக்கும் பேரணியில் 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
மதுரையில் சர்வேயர் காலணியில் இருந்து புதூர் பேருந்து நிலையம் வரை பேரணி நடந்தது.
திருப்பத்தூர் நாட்றாம்பள்ளியில் நடந்த பேரணியில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கோவையில் சிவானந்தா காலனி முதல் அம்ருதா வித்யாலயம் பள்ளி வரையிலும் ஒரு பேரணி நடந்தது. வடவள்ளியில் ஒரு இடங்களில் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினர் பேரணி நடத்தினர்.
தென்காசியில் நடந்த பேரணியில் 300க்கும் மேற்பட்ட ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினர் பங்கேற்றனர்.
பேரணியை முன்னிட்டு, அனைத்து பகுதிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.