ஹரியானாவில் 3-வது முறையாக பாஜக ஆட்சி அமைக்கிறது
1 min readBJP forms government for 3rd time in Haryana
8.10.2024
ஹரியானாவில் இருக்கும் 90 தொகுதிகளுக்கு கடந்த அக்டோபர் 5ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற்றது. பாஜக இந்த தேர்தலில் தனியாக 89 இடங்களில் போட்டியிட்டது. இந்தியா கூட்டணி சார்பாக காங்கிரஸ் 89 இடங்களில் போட்டியிட்டது.
ஹரியானாவில் மாலை 6.40 மணி நிலவரப்படி காங்கிரஸ் 35 தொகுதிகளில் வெற்றியும், 2 தொகுதிகளில் முன்னிலையும் பெற்றுள்ளது. பாஜக 46 தொகுதிகளில் வெற்றி பெற்று, 2 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. தேர்தல் முடிவுகள் அடிப்படையில் ஹரியானாவில் 3வது முறையாக பாஜக ஆட்சி அமைக்க உள்ளது.