குற்றால அருவிகளில் குளிக்க தடை
1 min readBathing in Koorala waterfalls is prohibited
4/11/2024
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த 1-ந் தேதி பலத்த மழை பெய்தது. இதனால் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து அதிகரித்தது. அங்கு சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று முன்தினம் நீர்வரத்து சீரானதால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.
தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறையையொட்டி குற்றாலத்தில் குடும்பத்துடன் குவிந்த சுற்றுலா பயணிகள் அனைத்து அருவிகளிலும் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். மாலையில் மலைப்பகுதியில் பெய்த மழை காரணமாக அருவிகளுக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரித்தது. இதையடுத்து பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு போலீசார் தடை விதித்தனர்.
இந்தநிலையில் நேற்று காலையில் அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து சீரானது. அதனை தொடர்ந்து அருவிகளில் குளிப்பதற்கு போலீசார் அனுமதி அளித்தனர். இதனால் குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். குறிப்பாக மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் நின்று குளித்துச் சென்றனர்.