கடையம் தெற்கு ஒன்றிய திமுக பாக மகவர்கள் கூட்டம்
1 min read
The last meeting of Southern Union DMK faction members
14.11.2024
தென்காசி தெற்கு மாவட்டம்
கடையம் தெற்கு ஒன்றிய திமுக பாக மகவர்கள் கூட்டத்தில் தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சுரண்டைவை ஜெயபாலன், ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் கணேஷ் குமார் ஆதித்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கடையம் தெற்கு ஒன்றிய திமுக பாக முகவர்கள் கூட்டம் கடையத்தில் நடைபெற்றது.
கடையம ஒன்றிய திமுக செயலாளர் ஆ.ஜெயக்குமார் தலைமை வகித்தார். மாவட்ட துணை செயலாளர் தமிழ்செல்வன், மாவட்ட பிரதிநிதி அயன் சாமி முன்னிலை வகித்தனர். பாக முகவர் கோபாலகிருஷ்ணன் வரவேற்றார்.
தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வே.ஜெயபாலன், ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் கணேஷ்குமார் ஆதித்தன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு, ஆலோசனைகளை வழங்கி பேசினர்.இந்த கூட்டத்தில், 2026 சட்டமன்றத் தேர்தலில் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற தீவிர பணியாற்றுவது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.
இந்த கூட்டத்தில் தலைமை பொதுக்குழு உறுப்பினர் ரவிச்சந்திரன், ஒன்றிய பொருளாளர் சுடலைமுத்து , துணை செயலாளர்கள் வின்சென்ட், முல்லையப்பன், மாவட்ட பிரதிநிதிகள் முகமது யாகூப், அய்யன் சாமி, பொன் செல்வன், மாவட்ட மகளிரணி துணை அமைப்பாளர் சுந்தரி பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர் அண்ணா தாசன், விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் கருணா, பாக முகவர்கள் எல் அண்ட் டி முருகன், வாரி மீரா சாகிப், வெள்ளத்துரை, செல்வராஜ், வின்சென்ட் பால், ஜஹாங்கீர் , புகாரி மீரா சாஹிப், காமாட்சி தேவ், திருமலைத்துரை . அழகை முருகன், பொட்டல் மாரியப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.