குஜராத்தில் 700 கிலோ போதைப்பொருள் பறிமுதல்; 8 ஈரானியர்கள் கைது
1 min read
700 kg of drugs seized in Gujarat; 8 Iranians arrested
15/11/2024
குஜராத் மாநிலம் போர்பந்தர் அருகே உள்ள கடற்பகுதியில் போலீசார் மற்றும் போதைப்பொருள் தடுப்புப்பிரிவினரின் கூட்டு சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு படகில் இருந்து 700 கிலோ மெத்தபெட்டமைன் என்ற போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் போதைப்பொருளை கடத்த முயன்ற 8 ஈரானியர்களை போலீசார் கைது செய்துள்ளனர். கைதானவர்களிடம் அதிகளவிலான போதைப்பொருள் எங்கிருந்து எங்கு கொண்டு செல்லப்பட இருந்தது என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், போதைப்பொருள் இல்லாத பாரதத்திற்கான பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வையை இன்று நமது அதிகாரிகள் போதைப்பொருள் கடத்தல் கும்பலை பிடித்து தோராயமாக கைப்பற்றியது. குஜராத்தில் 700 கிலோ கடத்தல் போதைப்பொருளை குஜராத் போலீசார் மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாட்டு அதிகாரிகளின் கூட்டு நடவடிக்கையில் முறியடிக்கப்பட்டது. இந்த சம்பவம் நமது அதிகாரிகளுக்கு இடையே உள்ள தடையற்ற ஒருங்கிணைப்புக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. இந்த முயற்சியில் ஈடுபட்ட அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள் என்று பதிவிட்டுள்ளார்.