September 9, 2026

Seithi Saral

Tamil News Channel

பீகாரில் ரூ.6,640 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்கள் – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

1 min read

Development projects worth Rs 6,640 crore in Bihar – PM Modi launched

15.11.2024
பீகார் மாநிலத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, பிர்சா முண்டாவின் 150-வது பிறந்தநாளை முன்னிட்டு ஜமுய் மாவட்டத்தில் நடைபெற்ற ‘ஜன்ஜாதிய கவுரவ் திவாஸ்’ விழாவில் கலந்து கொண்டார். இந்த விழாவில் பிர்சா முண்டாவின் நினைவாக ஒரு நினைவு நாணயம் மற்றும் தபால் தலையை பிரதமர் மோடி வெளியிட்டார்.
இந்த திட்டங்கள் பழங்குடியின மக்கள் வாழும் பகுதிகளில் உள்கட்டமைப்பு, சுகாதாரம், கல்வி மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவதற்காக தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ‘பி.எம்.-ஜன்மன்'(PM-JANMAN) திட்டத்தின்கீழ் 23 நடமாடும் மருத்துவ மையங்களையும், தொலைதூர பழங்குடி பகுதிகளில் சுகாதார சேவைகளை மேம்படுத்துவதற்காக 30 மருத்துவ மையங்களையும் பிரதமர் தொடங்கி வைத்தார்.
மேலும் மத்திய பிரதேசத்தில் சிந்த்வாரா மற்றும் ஜபல்பூர் ஆகிய இடங்களில் பழங்குடியின சுதந்திரப் போராளிகள் அருங்காட்சியகங்களையும், பழங்குடி சமூகங்களின் வரலாற்றை ஆவணப்படுத்தவும், பாதுகாக்கவும் ஸ்ரீநகர் மற்றும் காங்டாக்கில் இரண்டு பழங்குடி ஆராய்ச்சி நிறுவனங்களையும் மோடி திறந்து வைத்தார். அதோடு, பழங்குடியினர் பகுதிகளில் 500 கி.மீ. புதிய சாலைகள் மற்றும் 100 பல்நோக்கு மையங்கள் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *