சத்தீஷ்காரில் 5 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை
1 min read
5 Naxalites shot dead in Chhattisgarh
16.11.2024
சத்தீஷ்கார், மராட்டியம், ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்கள் நக்சலைட்டுகள், மாவோயிஸ்ட்டுகளின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. இந்த நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் நடவடிக்கையில் மாநில சிறப்பு தனிப்படை போலீசாருடன் இணைந்து மத்திய ரிசர்வ் போலீசாரும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சத்தீஷ்கார் மாநிலம் நாராயண்பூர் , கன்கீர் மாவட்டங்களுக்கு இடையே உள்ள வனப்பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் அடிப்படையில் இன்று காலை 8 மணியளவில் எல்லைப்பாதுகாப்புப்படையினர், மாவட்ட ரிசர்வ் காவலர்கள், சிறப்பு படைப்பிரிவினர் இணைந்து வனப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது, அங்கு பதுங்கி இருந்த நக்சலைட்டுகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலுக்கு பாதுகாப்புப்படையினரும் பதிலடி கொடுத்தனர். பாதுகாப்புப்படையினர் நடத்திய தாக்குதலில் நக்சலைட்டுகள் 5 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த என்கவுன்டரின்போது பாதுகாப்புப்படையினர் 2 பேர் காயமடைந்தனர்.