தமிழ்நாட்டில் 17 சதவீதம் கூடுதலாக பெய்த வடகிழக்கு பருவமழை- ஆனால்…
1 min readNortheast monsoon rains in Tamil Nadu increased by 17 percent
7.12.2024
தமிழ்நாட்டில் அக்டோபர் மாதம் இறுதியில் துவங்கும் வடகிழக்கு பருவமழை இந்தாண்டு முன்கூட்டியே தொடங்கியது. வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்று காலை வரை, இயல்பை விட 17 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுவையில் 01.10.2024 முதல் 07.12.2024 வரை 448.0 (மி மீ) மழை பதிவாகியுள்ளது. இந்த காலகட்டத்தில் வழக்கமாக 384.5 (மி மீ) தான் பெய்யும்.
மேலும், சென்னையில் வடகிழக்கு பருவமழை இன்று காலை வரை, இயல்பை விட 18 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது.
ஆனால் தென்மாவட்டங்களில் போதிய மழை பெய்யவில்லை. நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் பல குளங்களில் தண்ணீர் இல்லை. அணைகளும் நிரம்பவில்லை. இதனால் விவசாயம் பாதிக்கப்பட்டு உள்ளது.