புயலால் திசைமாறி வந்த பர்மா மீனவர்கள்-கடலோர காவல்படை மீட்டது
1 min read![](https://www.seithisaral.in/wp-content/uploads/2024/12/பர்மா-மீனவர்கள்-1024x577.jpg)
Coast Guard rescues Burmese fishermen who were stranded by storm
7.12.2024
இந்திய கடலோர காவல் படை ரோந்து கப்பல் (C-436) வழக்கம்போல் நடுக்கடலில் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தது. அப்போது நாகை கடற்கரையிலிருந்து சுமார் 40 நாட்டில்கள் கடல் மைல் தொலைவில், பர்மா நாட்டின் படகு ஒன்று சந்தேகப்படும்படி நின்றுள்ளது. பின்னர் கடலோர காவல் படையினர், துப்பாக்கி முனையில் மீனவர்களை சுற்றி வளைத்து விசாரணை செய்தனர். விசாரணையில் பர்மா நாட்டு பகுதியை சேர்ந்த மீனவர்கள் க்யூலிவின், ஆங்சுனேஜ், வின்சாவ், ஹான்சோ ஆகியோர் கடந்த நவம்வர் 7 -ந் தேதி பர்மாவிலிருந்து படகில் புறப்பட்டு மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். பின்னர் ஃபெஞ்சல் புயல் காரணமாக திசை மாறிய மீனவர்கள், நாட்டுக்கு திரும்பிச் செல்ல முடியாமல் தவித்து வந்ததாக கூறப்படுகிறது. காற்றின் திசையை நோக்கி படகு தள்ளிக்கொண்டு இந்திய கடல் பகுதியை நோக்கி வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து பர்மா நாட்டு மீனவர்கள் 4 பேர் மற்றும் படகையும் பறிமுதல் செய்து நாகைக்கு இன்று காலை அழைந்து வந்தனர்.