திருமலையப்பபுரத்தில் இலவச சித்த மருத்துவ முகாம்
1 min read
Free Siddha medical camp in Tirumalaiyappapuram
8.12.2024
தென்காசி மாவட்டம் கடையம் அருகிலுள்ள திருமலையப்பபுரத்தில், இலவச சித்த மருத்துவம் மற்றும் கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை,
திருமலையப்பபுரத்தில் உள்ள, திரு கைலாசம் நினைவு உயர்நிலைப் பள்ளியில் வைத்து, இலவச சித்த மருத்துவ முகாம் மற்றும் கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது
பாளையங்கோட்டை அரசினர் சித்த மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை பட்ட மேற்படிப்பு குணப்பாடத்துறை பேராசிரியர் மருத்துவர் இசக்கி பாண்டியன்,
உதவி பேராசிரியர் மருத்துவர் அந்தோணித்துரைச்சி உள்ளிட்ட சித்த மருத்துவ குழுவினரும், நெல்லை மருத்துவர் அகர்வால் கண் மருத்துவமனை தென் மண்டல மருத்துவ இயக்குனர் மருத்துவர் லயனல் ராஜ் உள்ளிட்ட மருத்துவக்குழுவினரும் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனை செய்தனர்.
இந்த இலவச மருத்துவ முகாமில் மூட்டு வலி, வீக்கம், சளி, இரைப்பு, மலச்சிக்கல், மூலம், உள்ளிட்ட பல்வேறு உடல் நலப் பிரச்சினைகளுக்கும்,
மற்றும் கண் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் பரிசோதனை செய்து தீர்வு காணப்பட்டது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். இந்த முகாமிற்கான ஏற்பாடுகளை
தென்பாதிகை வியாபாரிகள் நலச்சங்கத் தலைவர் கட்டி அப்துல் காதர் மற்றும் நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.