பிக்சட் டெபாசிட்டுக்கு வரியா? வங்கி அதிகாரியை அடித்து உதைத்த வாடிக்கையாளர்
1 min readIs there a tax on fixed deposits? Customer beats and kicks bank officer
8.12.2024
மத்திய அரசு ஜி.எஸ்.டி. அமல்படுத்தியதில் இருந்து பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகிறார்கள். எல்லா பொருளுக்கு குறிப்பிட்ட சதவீதம் வரி என்பதால் மக்கள் தாங்கள் நேரடியாக பாதிக்கப்படுவதாக உணர்கிறார்கள். ஓட்டலுக்கு சென்றால் சாப்பாடு விலையைத்தான் முதலில் சொல்கிறார்கள். பில்கொடுக்கும்போதுதான் வரியை சொல்கிறார்கள். இது வாடிக்கையாளர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்துகிறது. ஜி.எஸ்.டி. இல்லாத இடமே இல்லை என்ற நிலையில் மக்கள் உள்ளனர்.
தாங்கள் சேமித்த பணத்திற்கும் வட்டிகட்ட வேண்டியநிலை உள்ளது. இந்த வரியால் ஒரு வாடிக்கையாளர் வங்கி மேனேஜரை அடித்து தாக்கும் அளவுக்கு மக்களின் ஆதங்கள் வெளிப்பட்டு உள்ளது.
குஜராத்தில் வங்கி மேனேஜருக்கும் வாடிக்கையாளருக்கும் இடையே நடந்த சண்டையின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பிக்சட் டெபாசிட் சேமிப்புக்கு அதிக வரிப் பிடித்தம் செய்ததால் ஆத்திரமடைந்த ஜெய்மன் ராவல் என்ற வாடிக்கையாளர் வங்கி மேலாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
வாக்குவாதம் சண்டையாக மாறியாக நிலையில் வங்கி மேனேஜரை ஜெயம் ராவல் சரமாரியாக தாக்கியுள்ளார். ஜெய்மன் ராவல் உடன் வந்திருத்த அவரது தாய் அவரை தடுக்க முயற்சித்தபோதும் கோபத்தின் உச்சியில் இருந்த ஜெய்மன் ராவல் தாக்குதலை தொடர்ந்துள்ளார்
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வஸ்த்ராபூரில் உள்ள யூனியன் வங்கி கிளையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. வீடியோ வைரலான நிலையில் வஸ்த்ராபூர் போலீசார் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையே பீகார் மாநிலம் பாட்னாவின் காந்தி மைதான பகுதியில் உள்ள கனரா வங்கிக் கிளையிலும் இதேபோன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பாக பரவிய வீடியோவில், நபர் ஒருவர் வங்கியில் வேலை செய்யும் பெண்ணை மிரட்டி அவரின் போனை பிடுங்கி கீழே வீசுவதும், CIBIL ஸ்கோர் தொடர்பாக வாக்குவாதம் செய்து மிரட்டல் விடுப்பதும் பதிவாகி உள்ளது.