இ.வி.கே.எஸ். இளங்கோவன் காலமானார்
1 min read
E.V.K.S. Elangovan passed away
14.12.2024
தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.,வுமான இளங்கோவன் (வயது )75 இன்று (டிச.14) காலமானார்.
ஏற்கனவே இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த இளங்கோவனுக்கு கடந்த மாதம் இறுதியில் உடல் நலம் குறைந்தது. காய்ச்சல் பாதிப்பு மற்றும் சளி தொல்லையால், சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சிகிச்சைகள் தொடர்ந்த நிலையில், அவருக்கு, நுரையீரலில் சளி தொற்று அதிமாகி, திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் அவர் இன்று இறந்தார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சியினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சில வாரங்களுக்கு முன்னதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் மருத்துவமனைக்கு சென்று இளங்கோவன் உடல் நலம் குறித்து நேரில் சந்தித்து விசாரித்தார்.
இளங்கோவன் வாழ்க்கை வரலாறு
1948ம் ஆண்டு டிசம்பர் 21ல் ஈரோட்டில் இளங்கோவன் பிறந்தார். சென்னை மாநில கல்லூரியில் பி.ஏ., பொருளாதாரம் பட்டம் பெற்ற இவர் தந்தை சம்பத் மறைவுக்கு பிறகு, காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். தாயார் சுலோசனா சம்பத், அதிமுக அமைப்பு செயலாளராக இருந்தார்.