தூத்துக்குடியில் மழை பாதிப்பில்லை என்பதா? – கனிமொழிக்கு தமிழிசை கேள்வி
1 min read
Does it mean that the rain is not affecting Thoothukudi? – Tamilisai questions Kanimozhi
16.12.2024
தூத்துக்குடி மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கனிமொழி எம்.பி. நேற்று நேரில் பார்வையிட்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டதால், தூத்துக்குடியில் பாதிப்புகள் ஏற்படவில்லை என தெரிவித்தார். கனிமொழியின் இந்த பேச்சை பாஜகவை சேர்ந்த தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;
“தூத்துக்குடியில் மழையால் பாதிப்பில்லை என தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கூறியுள்ளார். ஊடகங்கள் வெளியிடும் செய்திகளெல்லாம் பொய்யா? நீங்கள் கூறுவது அப்பட்டமான பொய்யா?
முழங்கால் அளவு தண்ணீரில் நடந்து கொண்டு மழையால் பாதிப்பு இல்லை என்று மக்களை ஏமாற்றுவதுதான் திராவிட மாடல்? மழை, வெள்ள பாதிப்பால் மக்கள் பரிதவித்துக்கொண்டிருக்கும் போது மழையால் பாதிப்பில்லை என்று கூறுகிறீர்களே? உங்கள் பார்வையில் மழை, வெள்ள பாதிப்பின் அளவுகோல் என்ன?”
இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.