June 6, 2026

Seithi Saral

Tamil News Channel

மத்திய அரசு, அ.தி.மு.க.வை கண்டித்து தி.மு.க. தீர்மானம்

1 min read

DMK resolution condemning the Central Government and AIADMK

22.12.2024
தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்டச் செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள், அணி நிர்வாகிகள் என 850-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இதில் கட்சியின் ஆக்கப் பணிகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மேலும் 2026ம் சட்டசபை தேர்தல் குறித்து விவாதித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.

இந்நிலையில் தி.மு.க. செயற்குழுவில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை வருமாறு:-

  • அம்பேத்கரை அவதூறாகப் பேசிய மத்திய மந்திரி அமித்ஷாவுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம்
  • ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை கைவிட வலியுறுத்தி தீர்மானம்
  • புயல் வெள்ள நிவாரணமாக ரூ.2,000 கோடி நிதி வழங்க மத்திய அரசுக்கு வலியுறுத்தி தீர்மானம்: உரிய நிதியை வழங்காமல் வஞ்சிப்பதாக மத்திய அரசுக்கு திமுக செயற்குழு கண்டனம்.
  • பெங்சல் புயலில் சிறப்பாக செயல்பட்ட தமிழ்நாடு அரசுக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம்
  • மதுரை டங்ஸ்டன் கனிம சுரங்க ஏலத்தை ஆதரித்த அதிமுகவை செயற்குழு கண்டனம்: டங்ஸ்டன் கனிம ஏலம் விட்ட பா.ஜ.க. அரசும், அதிமுக அரசும் கபட நாடகம் போடுவதாக கண்டனம்
  • குலத்தொழிலை ஊக்குவிக்கும் மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டத்திற்கு எதிர்ப்பு: கைவினை கலைஞர்களை ஊக்குவிக்க புதிய திட்டத்தை செயல்படுத்தும் தமிழக அரசுக்கு பாராட்டு
  • தமிழ்நாட்டுக்கு உரிய கல்வி நிதியை வழங்காமல் மத்திய அரசு திட்டமிட்டு வஞ்சிப்பதாக கண்டனம் தெரிவித்து தீர்மானம்.
  • தமிழ்நாடு முழுவதும் திருவள்ளூர், சிலையின் வெள்ளி விழாவை முன்னெடுத்து சமத்துவத்தை நிலைநாட்டுவோம்.
  • சாத்தனூர் அணையை படிப்படியாக திறக்க உத்தரவிட்டு உயிர்சேதத்தை தவிர்த்த முதல்-அமைச்சருக்கு பாராட்டு
  • தமிழ்நாடு அரசு கோரிய ரூ.6,675 கோடி நிவாரண நிதியை ஒதுக்காத மத்திய அரசுக்கு கண்டனம்
  • தை முதல்நாள் கொண்டாடப்படும் பொங்கல் திருநாள் என்பது தமிழர்களின் மரபார்ந்த ஆண்டுக்கணக்கின் தொடக்கமாகும்; தை முதல் நாளன்று தமிழ்நாட்டில் மட்டுமின்றி உலகெங்கும் தமிழர் வாழும் நாடுகளெங்கும் சமத்துவப் பொங்கல் வைத்து கொண்டாடி, தமிழர் பண்பாட்டிற்குரிய கலை இசை நிகழ்வுகள், பாரம்பரிய விளையாட்டுகள் ஆகியவற்றை நடத்தி, தமிழர்களின் தனித்துவத்தை நிலைநாட்டிட வேண்டும் என தீர்மானம்
  • காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவுக்கு தி.மு.க. இரங்கல் தீர்மானம்
  • அரசை குறை கூறிவரும் அ.தி.மு.க.வுக்கும், அரைவேக்காட்டு அரசியல் நடத்தி வரும் சில அரசியல் கட்சிகளுக்கும் தக்க பாடம் புகட்ட வேண்டும். வருகிற 2026 சட்டசபை தேர்தலில் 200 மட்டுமல்ல, 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற இன்றே புறப்படுவீர். தி.மு.க. ஆட்சி வருங்காலத்திலும் தொடர்ந்திடுவதை தொண்டர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம்

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றுவரும் இந்த கூட்டத்தில் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, கனிமொழி உள்ளிட்ட துணைப் பொதுச்செயலாளர்கள், துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்டக் கழக செயலாளர்கள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *