கடையம் திருவள்ளுவர் கழக விழாவில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளால் பேச்சு
1 min read
Kunrakudi Ponnambala’s speech at the Kadayam Thiruvalluvar Kazhagam festival
22.12.2024
தென்காசி மாவட்டம் கடையத்தில் திருவள்ளுவர் கழக 30-ஆவது ஆண்டு விழா நேற்று (சனிக்கிழமை) கடையம் தெற்கு ரத வீதியில் உள்ள நடராஜ் திருமண மண்டபத்தில் நடக்கிறது.
விழாவுக்கு திருவள்ளுவர் கழகத் தலைவர் தமிழ்த்தென்றல் ஆ.சேதுராமலிங்கம் தலைமை தாங்கினார். டாக்டர் பரமசிவன் முன்னிலை வகித்தார். திருவள்ளுவர் கழக செயலாளர் க.சோ.கல்யாணி சிவகாமிநாதன் வரவேற்று பேசினார்.
தென்காசி திருவள்ளுவர் கழக தலைவர் ந.கனகசபாபதி விழா தொடக்க உரையாற்றினார்.
குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசும்போது, பாரதியார், செல்லம்மாள், வ.உ.சி., மகாத்மா காந்தி ஆகியோரின் வாழ்வியல் பண்புகளை திருக்குறளோடு இணைத்து உரையாற்றினார். மனித நேயம் பேணவும், மனிதன் மனிதன் மனிதனாக வாழவும் சமுதாய ஒருங்கிணைவு ஓங்கவும் திருக்குறளே நமக்கு வழிகாட்டுகிறது என்றும் கூறினார்.
ஆழ்வார்குறிச்சி திருவள்ளுவர் கழகத் துணைத் தலைவர் ச.மாடசாமி , அம்பை திருக்குறள் கல்வி அறக்கட்டளை பொருளாளர் புன்னைவன நாறும்பூநாதன், பாப்பாக்குடி பைந்தமிழ் இலக்கிய பேரவை நிறுவனர் அ.முருகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
திருவள்ளுவர் கழக செயற்குழு உறுப்பினர் க.சங்கரநாராயணன் நன்றி கூறினார்.
கடையம் வட்டாரத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் இரண்டு இடம் வந்த மாணவ-மாணவிகளுக்கு பரிசினை குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் வழங்கினார்.
கடைத்தில் கோமதிநாயகம், இசக்கி, இரா.செல்வம், இல.ராமசாமி ஆகியோர் முதியோர்களுக்கும் மாற்றுதிறளாகளுக்கும் இலவசமாக மதிய உணவை அவர்களின் இல்லம் சென்று வழங்கி வருகிறார்கள். அவர்களை மேடைக்கு அழைத்து கவுரவித்தார்கள். (மேலும் நேற்று ஒருநாள் மதிய உணவுக்கான செலவை திருவள்ளுவர் கழகம் ஏற்றுக்கொண்டது.) அவர்களுக்கு பொன்னம்பல அடிகளார் பொன்னாடை போர்த்தி பாராட்டினார்.
விழாவில் பேராசிரியர் சிவகாசி ராமச்சந்திரன், ஆழ்வார்குறிச்சி அம்பாசமுத்திரம் தென்காசி திருவள்ளுவர் கழக பொறுப்பாளர்கள், அம்பை திருவள்ளுவர் கல்வி அறக்கட்டளை நிர்வாகிகள், பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரி முதல்வர், முன்னாள் முதல்வர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் இரவு உணவு பரிமாறப்பட்டது.