பாஜக.வில் இருந்து விலகுவதாக அமர் பிரசாத் ரெட்டி அறிவிப்பு
1 min read
Amar Prasad Reddy announces resignation from BJP
10.6.2026
பாஜக இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு பிரிவு தலைவராக இருந்த அமர் பிரசாத் ரெட்டி, கட்சியில் இருந்து விலகியுள்ளார். அவர் அண்ணாமலையின் புதிய இயக்கத்தில் இணைகிறார்.
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை புதிதாகத் தொடங்கியுள்ள ‘இது நம்ம இயக்கம்’ எனும் அரசியல் இயக்கத்தில், பலதரப்பட்ட மக்களும், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளும் உறுப்பினர்களாகவும், தன்னார்வலர்களாகவும் இணையத்தளம் மற்றும் செயலி வழியாக இணைந்து வருகின்றனர். அந்தவகையில் பாஜவின் முக்கிய நிர்வாகிகளும் இணைந்து வருகின்றனர்.
தற்போது வரை அண்ணாமலை தொடங்கியுள்ள புதிய இயக்கத்தில் 17 லட்சத்து 27 ஆயிரத்து 864 பேர் இணைந்துள்ளனர். இந்நிலையில் பாஜக இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு பிரிவு தலைவராக இருந்த அமர் பிரசாத் ரெட்டி, கட்சியில் இருந்து விலகியுள்ளார். அவர் அண்ணாமலையின் புதிய இயக்கத்தில் இணைகிறார்.
”ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் திமுக இருக்கிறது என்றால், தமிழக பாஜக 4,5 பேரின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. தோல்வி அடைந்தாலும் அவர்களே தான் மீண்டும் மீண்டும் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று நினைக்கிறார்கள்” என அமர் பிரசாத் ரெட்டி குற்றம்சாட்டியுள்ளார்.