June 10, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசியில் சாலை பாதுகாப்பு மாத விழா பேரணி- கலெக்டர் தொடங்கி வைத்தார்

1 min read

Road Safety Month Celebration Rally in Tenkasi – Collector Inaugurates

11.1.2025
தென்காசியில் சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை தென்காசி மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமையேற்று கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற சாலை பாதுகாப்பு மாத விழா நிகழ்ச்சிக்கு ஏடிஎஸ்பி வேணுகோபால், டிஎஸ்பி தமிழ் இனியன், ஆகியோர் முன்னிலை வகித்தனர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரையும் தென்காசி வட்டார போக்குவரத்து அலுவலர் கண்ணன் வரவேற்று பேசினார். மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ராஜீ, கனகவள்ளி சாலை பாதுகாப்பு விதிமுறைகள் பற்றி சிறப்புரையாற்றினர்,

தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்ட சாலை பாதுகாப்பு மாத விழா பேரணியில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் மற்றும் சாலை விதிகளை கடைபிடிப்பது ஆகியவற்றை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பதாகைகளை ஏந்திய வண்ணம் சென்ற பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்று பழைய பேருந்து நிலையம் சென்றடைந்து.

இந்நிகழ்ச்சியில் தென்காசி காவல் ஆய்வாளர் ராபார்ட் ஜெயின், தென்காசி போக்குவரத்து காவல் ஆய்வாளர் மணி, உதவி ஆய்வாளர் முருகேஸ்வரி, போக்குவரத்து உதவி காவல் ஆய்வாளர் மணிகண்டன் மற்றும் காவலர்கள் , தென்காசி மாவட்ட ரெட்கிராஸ் செயலாளர் ரவிச்சந்திரன் , தென்காசி, சங்கரன்கோவில் ஆலங்குளம் போக்குவரத்து அலுவலக அனைத்து ஓட்டுநர் பயிற்சி பள்ளியினர் , வாகன விற்பனை பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். முடிவில் மோட்டார் வாகன ஆய்வாளர் மணிபாரதி அனைவருக்கும் நன்றி கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *