சுவாமி விவேகானந்தருக்கு ஜனாதிபதி முர்மு, பிரதமர் மோடி புகழாரம்
1 min read
President Murmu, Prime Minister Modi pay tribute to Swami Vivekananda
12.1.2025
விவேகானந்தரின் பிறந்த நாளான இன்று (ஜனவரி 12 ஆம் தேதி) தேசிய இளைஞர் நாளாக கொண்டாடப்பட்டது.சுவாமி விவேகானந்தரின் 162-வது பிறந்த நாள் விழா நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டது.
விவேகானந்தர் பிறந்த நாளையொட்டி இந்திய மக்களுக்கு ஒரு புதிய தன்மையை கொண்டுவந்தவர் என்று ஜனாதிபதி திரவுபதி முர்மு கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது;
விவேகானந்தரின் பிறந்தநாளில் அவருக்கு எனது பணிவான அஞ்சலிகளைச் செலுத்துகிறேன். இந்தியாவின் மகத்தான ஆன்மிகச் செய்தியை மேற்கத்திய உலகிற்கு எடுத்துச் சென்றார். இந்திய மக்களிடையே அவர் ஒரு புதிய தன்னம்பிக்கையை ஏற்படுத்தினார். இளைஞர்கள் தங்கள் திறனை வெளிப்படுத்தவும், தேசத்தைக் கட்டியெழுப்பவும், மனிதகுலத்திற்கு சேவை செய்யவும் அவர் ஊக்கமளித்தார். அவரது மரபு உலகெங்கிலும் உள்ள எண்ணற்ற மக்களை தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
விவேகானந்தர் இளைஞர்களுக்கு ஒரு நித்திய உத்வேகம் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தள பதிவில் கூறியதாவது:-
1863 ல் பிறந்த சுவாமி விவேகானந்தர் புகழ்பெற்ற ராமகிருஷ்ணா மிஷனை நிறுவினார். வேதாந்தம் மற்றும் இந்து தத்துவத்தின் பிற அம்சங்கள் குறித்த அவரது பணிகள் அதிகம் மதிப்புமிக்கவை.
இளைஞர்களுக்கு ஒரு நித்திய உத்வேகமான அவர், இளைஞர்களின் மனங்களில் ஆர்வத்தையும் நோக்கத்தையும் தொடர்ந்து தூண்டிவிட்டுக்கொண்டிருக்கிறார். வலுவான மற்றும் வளர்ந்த இந்தியா என்ற அவரது தொலைநோக்கு பார்வையை நிறைவேற்ற நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.