டாஸ்மாக்கைவிட கோமியம் கெடுதலில்லை-தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி
1 min read
Komiyam is no worse than TASMAC- Tamilisai Soundararajan interview
21.1.2025
சென்னையில் தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
மாட்டுக்கறியை சாப்பிடுகிறார்கள், மாட்டுச் சாணத்தை பயன்படுத்துகிறார்கள்; விஞ்ஞான பூர்வ அமிர்த நீரான கோமியத்தை பயன்படுத்தக்கூடாது என கூறுகிறார்கள். பசுவின் கோமியம் டாஸ்மாக்கைவிட மோசமானது இல்லை. 80 வகையான காய்ச்சலுக்கு கோமியம் மருந்தாக உள்ளது. கோமியத்தை அமிர்த நீர் என்றே குறிப்பிடுகிறார்கள்.
பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டத்திற்கு செல்ல விஜய் பறந்து போனாரா? இல்லை மறந்து போனாரா? பரந்தூர் மக்கள் 909 நாட்களாக போராடியபோது விஜய் என்ன செய்துகொண்டிருந்தார்? என கேள்வி எழுப்பி உள்ளார்.