திருநெல்வேலி: நகை கொள்ளை வழக்கில் 2 பேருக்கு 7 ஆண்டு சிறை
1 min read
Tirunelveli: 7-year prison sentences for 2 individuals convicted in a jewelry robbery case
30.10.2026
திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூர் அருகே நகை கொள்ளை வழக்கில் ஈடுபட்ட 2 குற்றவாளிகளுக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2022-ம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூர் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீரவநல்லூரை சேர்ந்த மைதீன் பிச்சை என்பவரை ஆயுதத்தால் தாக்கி, அவரது நகைகளை கொள்ளை அடித்த குற்றத்தில் ஈடுபட்டது தொடர்பாக, வீரவநல்லூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.
புலன் விசாரணை முடிவில் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்து, வழக்கின் விசாரணையானது அம்பாசமுத்திரம் சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் வழக்கில் தொடர்புடைய மருதுபாண்டி இறந்த நிலையில், அரிகேசவநல்லூரை சேர்ந்த சுதாகர் (வயது 22), காக்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஐயப்பன்(28) ஆகிய 2 பேர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு, நீதிபதி மருதபாண்டி இன்று (30.10.2026) குற்றவாளிகளுக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார்.
இந்த வழக்கில் திறம்பட சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தந்த சேரன்மகாதேவி உட்கோட்ட டி.எஸ்.பி. அஸ்வத் அன்டோ ஆரோக்கியராஜ், இவ்வழக்கினை திறம்பட புலன் விசாரணை செய்த அப்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் (தற்போது தூத்துக்குடி மாவட்டம்), வழக்கின் விசாரணைக்கு உதவி செய்த நீதிமன்ற காவலர் குமரேசன் மற்றும் நீதிமன்றத்தில் சிறப்பாக வாதிட்ட அரசு வழக்கறிஞர் வரம்தரும் பெருமாள் ஆகியோரை திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. விஷ்வேஷ் பா.சாஸ்திரி பாராட்டினார்.
நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்குகளில் சாட்சிகளை ஆஜர்ப்படுத்தி, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரும் முனைப்பில் தொடர்ந்து, உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.