August 19, 2026

Seithi Saral

Tamil News Channel

கவர்னரின் தேநீர் விருந்து: விஜய்க்கு அழைப்பு

1 min read

Governor’s tea party: Invitation to Thaweka leader Vijay

24.1.2025
ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தையொட்டி சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் தேநீர் விருந்து அளிக்கப்படுவது வழக்கம். கவர்னர் தலைமையில் நடைபெறும் தேநீர் விருந்தில் முதல்-அமைச்சர், அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், ஐகோர்ட்டு நீதிபதிகள், மூத்த ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஆளுமைகள் எனப் பலரும் பங்கேற்பார்கள்.
அந்த வகையில், இந்த ஆண்டுக்கான குடியரசு தின விழா தேநீர் விருந்தில் கலந்துகொள்ள அரசியல் கட்சியினர் பலருக்கு அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், குடியரசு தினத்தையொட்டி கவர்னர் அளிக்கும் தேநீர் விருந்தில் பங்கேற்க தவெக தலைவர் விஜய்க்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கவர்னர் ஆர்.என். ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் தவெக தலைவர் விஜய் பங்கேற்பாரா? என்பது குறித்து விரைவில் தவெக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *