July 4, 2025

Seithi Saral

Tamil News Channel

குறைவான செலவில்’டீப்சீக்’ சீனா அறிமுகம் செய்த புதிய ஏ.ஐ.

1 min read

China’s new AI ‘Deepseek’ launched at a low cost

28.1.2025
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் உலக அளவில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியுள்ளது. இப்போதுவரை இந்த ஏஐ தொழில்நுட்பத்தில் ஓபன் ஏஐ – சாட்ஜிபிடி, கூகுள் – ஜெமினி ஆகியவையே அமெரிக்க நிறுவனகளே கோலோச்சி வந்தன.
இந்நிலையில் அவற்றுக்கு சவால் விடும் வகையில் சீன நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய ஏஐ மாடல் அமைந்துள்ளது. இது ஏஐ உலகில் புரட்சியை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது.
2023ஆம் ஆண்டில் சீன குவாண்ட் ஹெட்ஜ் ஃபண்ட் தலைவரான லியாங் வென்ஃபெங் என்பவரால் தொடங்கப்பட்ட நிறுவனம் டீப்சீக் (Deepseek).
இந்த நிறுவனம் தற்போது டீப்சீக், ஆர்1 மற்றும் ஆர்1 ஜீரோ என்ற இரு ஏஐ மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் ஆர்1 மாடல் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. ஆர்1 என்பது வழக்கமான ஏஐ மாடல் ஆகும். இன்னும் பயன்பாட்டுக்கு வாராத ஆர்1 ஜீரோ தானாகவே கற்பித்துக்கொள்ளும் (self-taught) ஏஐ மாடல் ஆகும்.
அமெரிக்க நிறுவனங்களை விட குறைவாக 6 மில்லியன் டாலர்கள் செலவில் டீப்சீக் ஏஐ உருவாக்கப்பட்டுள்ளது.
டீப்சீக் ஏஐ மாடல் வருகையால் அமெரிக்க நிறுவனங்கள் ஆட்டம் கண்டுள்ளன. ஏனெனில் டீப்சீக் ஏஐ முற்றிலும் இலவசமாகும். தற்போது சந்தையில் உள்ள சாட்ஜிபிடி, ஜெமினி ஆகியவை பயனர்களுக்குப் பழைய வெர்ஷன்களை மட்டுமே இலவசமாக வழங்குகிறது. புதிய அம்சங்களுக்குக் கட்டணம் பெறுகிறது. ஆனால் டீப்சீக் ஏஐ, அனைத்து நவீன வசதிகளையும் இலவசமாக வழங்குகிறது.
மேலும் டீப்சீக் ஏஐ மாடலை இயக்கும் செலவும் குறைவாகும். ஓபன் ஏஐ மாடலை இயக்க 10 இன்புட் டோக்கன்கள் தேவை, அதற்கு 15 டாலர் செலவாகும். ஆனால் டீப்சீக் மாடலில் அதே 10 இன்புட் டோக்கன்கள் செலவு 0.55 டாலர்கள் மட்டுமே. அதாவது ஓபன் ஏஐ மாடலை விட டீப் சீக் மாடலை இயக்க 27 மடங்கு குறைவாகவே செலவாகிறது.
மேலும் சாட்ஜிபிடி மற்றும் ஜெமினி ஆகியவை க்ளோஸ்ட்டு சோர்ஸ் ஏஐ மாடல்கள். ஆனால் டீப்சீக் ஏஐ ஓபன் சோர்ஸ் ஏஐ மாடல், அதவாது, யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் இதை அணுக முடியும் என்பது இதன் தனிச்சிறப்பு. எனவே அமெரிக்க நிறுவனங்கள் இந்த புதிய போட்டியாளரை கண்டு நடுக்கத்தில் உள்ளன. பங்குச்சந்தையிலும் டீப்சீக் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
மியாமியில் நடந்த கூட்டத்தில் பேசிய அமெரிக்க அதிபர் டொனல்டு டிரம்ப், டீப்சீக் ஏஐ, அமெரிக்காவுக்கான எச்சரிக்கை மணி என்று பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே சடஜிப்டி ஐ விஞ்சி ஆப்பிளின் US ஸ்டோரில் அதிகமாக இன்ஸ்டால் செய்யப்பட்டு வருகிறது. டீப்சீக் செயலி உலகளவில் அளவுக்கு அதிகமான டவுன்லோட்களை கடந்து அசத்தியது.
மிக குறுகிய காலக்கட்டத்தில் மிகவும் பிரபலம் அடைந்த நிலையில், டீப்சீக் தளத்தை குறிவைத்து சைபர் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. இதையடுத்து, டீப்சீக் சேவையை பயன்படுத்த வழிவகை செய்யும் பதிவு முறையை அந்நிறுவனம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.