அமெரிக்க அதிபர் டிரம்புடன் பிரதமர் மோடி டெலிபோனில் பேச்சு
1 min read
PM Modi speaks to US President Trump over phone
28.1.2025
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்டு டிரம்ப் கடந்த வாரம் (ஜனவரி 20-ந்தேதி) அதிபராக பதவி ஏற்றுக்கொண்டார். டொனால்டு டிரம்ப் பதவி ஏற்பு விழாவில் இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கலந்து கொண்டார்.
இந்த நிலையில் இந்திய பிரதமர் மோடி, அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப் உடன் டெலிபோனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
இருதரப்பு உறவு குறித்து இருவரும் பேசியதாகவும், இந்தியா ஒரு அற்புதமான நாடு என்றும், பிரதமர் மோடியையும் இந்தியாவையும் உண்மையான நண்பர்களாக கருதுவதாகவும் டிரம்ப் கூறியதாக வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும் இரு தலைவர்களும் உலக அமைதிக்காக இணைந்து பணியாற்ற ஒப்புக்கொண்டதாகவும் வட்டாரங்கள் தெரிவித்தன.
டொனால்டு டிரம்ப் 2-வது முறையாக அமெரிக்க அதிபராக பதவி ஏற்ற பிறகு முதன்முறையாக பிரதமர் மோடி அவருடன் பேசியுள்ளார்.