June 12, 2026

Seithi Saral

Tamil News Channel

சுனிதா வில்லியம்சை பூமிக்கு அழைத்து வர எலான் மஸ்கிடம் அதிபர் டிரம்ப் அறிவுறுத்தல்

1 min read

President Trump instructs Elon Musk to bring Sunita Williams to Earth

29.1.2025
அமெரிக்க தொழிலதிபரும், உலக பணக்காரர்களில் ஒருவருமான எலான் மஸ்க் அதிபர் டொனால்டு டிரம்ப் தன்னிடம் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பூமிக்கு திரும்ப முடியாமல் தவிக்கும் இரண்டு விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பட்ச் வில்மோர் ஆகியோரை மீட்க தேவையான ஏற்பாடுகளை செய்யுமாறு வலியுறுத்தி இருப்பதாக தெரிவித்துள்ளார்.
முன்னாள் அதிபர் ஜோ பைடனின் நிர்வாகத்தால் இரண்டு விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் நீண்ட காலமாக சிக்கி தவித்து வருவது கொடூரமானது என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

“விண்வெளி ஆய்வு மையத்தில் சிக்கித் தவிக்கும் இரண்டு விண்வெளி வீரர்களை விரைவில் வீட்டிற்கு அழைத்து வர டொனால்டு டிரம்ப் ஸ்பேஸ் எக்ஸ்-ஐ கேட்டுள்ளார். நாங்கள் அவ்வாறு செய்வோம். பைடன் இவர்களை நீண்ட காலம் தவிக்க செய்தது கொடூரமானது,” என்று மஸ்க் எக்ஸ் தள பதிவில் கூறினார்.
கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக விண்வெளி ஆய்வு மையத்தில் வீரர்கள் சிக்கித் தவிக்கும் நிலையில், அவர்கள் சிக்கி தவிக்கவில்லை, நலமுடன் இருக்கிறார்கள் என்று அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா தொடர்ச்சியாக தெரிவித்து வருகிறது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் விண்வெளி ஆய்வு மையத்திற்கு சென்ற சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் பத்து நாட்களில் பூமிக்க திரும்ப திட்டமிடப்பட்டு இருந்தது. எனினும், அவர்கள் இன்றுவரை பூமிக்கு திரும்ப முடியாத சூழல்தான் நிலவுகிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *