மீனவர்கள் மீதான துப்பாக்கி சூடு தற்செயலாக நடந்தது-இலங்கை கடற்படை விளக்கம்
1 min read
Sri Lanka Navy explains that the shooting at the fishermen was accidental
30.1.2025
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மற்றும் தமிழக மீனவர்கள் 13 பேர் கோடியக்கரைக்கு தென் கிழக்கே உள்ள கடல் பகுதியில் மீன்பிடித்துக்கொண்டு இருந்தனர். அப்போது அவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தி 13 மீனவர்களையும் கைது செய்தனர். இதில் 2 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவத்துக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
டெல்லியில் உள்ள இலங்கை தூதரை நேரில் அழைத்து, வெளியுறவுத்துறை அமைச்சகம், மீனவர்கள் மீதான துப்பாக்கி சூடு ஏற்புடையது அல்ல. இது விஷயத்தில் உரிய வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று கண்டிப்புடன் கூறியது. இதே கருத்தை இலங்கையில் உள்ள இந்திய தூதரகமும், இலங்கை அரசுக்கு தெரிவித்தது.
இதனிடையே முதற்கட்ட விசாரணைகளின்படி, இலங்கை கடற்படை வீரர் ஒருவர் தற்செயலாக துப்பாக்கி சூடு நடத்தியதால் 2 இந்திய மீனவர்களும் காயமடைந்ததாக இலங்கை கடற்படைத் தளபதி காஞ்சனா பனகோடா தெரிவித்தார்.