June 13, 2026

Seithi Saral

Tamil News Channel

கடையம் திருவள்ளுவர் கழகத்தின் முத்தமிழ் விழா

1 min read

Muthamizh festival of the Kadayam Thiruvalluvar Kazhagam

8.3.2025
கடையம் திருவள்ளுவர் கழகத்தின் சார்பில் கடையம் திருவள்ளுவர் கழக நிறுவனர் பேராசிரியர் அறிவரசன்(குமாரசாமி) நினைவு முத்தமிழ் விழா இன்று(8.3.2025) கடையம் வடக்குரத வீதியில் உள்ள கே.எஸ்.எஸ். சிற்றரங்கில் கொண்டாடப்பட்டது.
திருவள்ளுவர் கழக தலைவர் தமிழ்த் தென்றல் ஆ.சேதுராமலிங்கம் தலைமை தாங்கினார். டாக்டர் கல்யாணி பரமசிவன் முன்னிலை வகித்தார். மகளிர் தினத்தன்று இது தனக்கு கிடைத்த கவுரவம் என்று அவர் பேசினார்.
செயலாளர் கல்யாணி சிவகாமிநாதன் வரவேற்று நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
ஆசியர் வேலு ஒரு குறள் விளக்கம் தந்தார்.
பாவலர் பாப்பாகுடி அ. முருகன் இயல் தமிழ் உரையாற்றினார். அவர் மறைந்த தலைவர் பேராசிரியர் அறிவரசன் அவர்களைப் பற்றியும் அவர் எழுதிய புத்தகம் பற்றியும் பேசினார்.
இசைத்தமிழாக தமிழ் பல்கலைக்கழக மெய்யியல் துறை பேராசிரியர் தமிழிசை ஞானி கோ.ப.நல்லசிவம் சிலப்பதிகாரம் முதல் பாரதியார் வரையுள்ள புலவர்களின் பாடல்களை இசைபட பாடினார். அதற்கான விளக்கத்தையும் கூறினார்.
நாடக விழாவாக சேவாலயா- செல்லம்மாள் பாரதி கற்றல் மையம் மாணவிகள் நடன நிகழ்ச்சி நடந்து.
முன்னாள் தாசில்தார் சின்னசாமி நன்றி கூறினார்.
விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் மதிய விருந்து பரிமாறப்பட்டது.

HistorySaved

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *