August 19, 2026

Seithi Saral

Tamil News Channel

மூன்றாவது குழந்தை பெற்றுக் கொள்ள ஓராண்டு விடுப்பு: சட்டசபையில் அறிவிப்பு

1 min read

One-year leave for having a third child: Tamil Nadu government announces in the Assembly.

18/8/2026
தமிழகத்தில் உள்ள அரசு பெண் ஊழியர்கள், மூன்றாவது குழந்தை பெற்றுக் கொள்ள ஓராண்டு மகப்பேறு விடுப்பு வழங்கப்படும் என சட்டசபையில் அமைச்சர் சரத்குமார் அறிவித்து உள்ளார்.

தமிழக அரசு பெண் பணியாளர்களுக்கு, முதலாவது மற்றும் இரண்டாவது குழந்தைகளுக்கு தலா, 12 மாதங்கள் முழு சம்பளத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்கப்படுகிறது. மூன்றாவது குழந்தைக்கு, 12 வாரங்கள் விடுப்பு வழங்க அனுமதி வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் சட்டசபையில் மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் சரத்குமார் பேசுகையில், தமிழகத்தில் அனைத்து அரசு பெண் ஊழியர்களுக்கும் மூன்றாவது குழந்தை பெற்றுக் கொள்ள ஓராண்டு மகப்பேறு விடுமுறை அளிக்கப்படும் என அறிவித்தார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *