இந்தியாவில் 13 ஆயிரம் சதுர கி.மீ. வனப்பகுதிகள் ஆக்கிரமிப்பு
1 min read
13 thousand square km of forest areas in India are encroached upon
2/4/2025
வனப்பகுதிகள் ஆக்கிரமிப்பு தொடர்பான வழக்கு ஒன்றில் தேசிய பசுமை தீர்ப்பாயம், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள வனப்பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்பு விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய வனத்துறைக்கு உத்தரவிட்டது.
அதன்படி கடந்த 2024-ம் ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி 25 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 13 ஆயிரத்து 56 சதுர கிலோ மீட்டர் வனப்பகுதி ஆக்கிரமிப்பின் கீழ் இருப்பதாக வனத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அந்தமான்-நிக்கோபார் தீவுகள், அசாம், அருணாச்சல பிரதேசம், ஆந்திர பிரதேசம், சண்டிகர், சத்தீஷ்கார், தாத்ரா-நகர் ஹவேலி, டாமன்-டையூ, கேரளா, லட்சத்தீவுகள், மராட்டியம், ஒடிசா, புதுச்சேரி, பஞ்சாப், தமிழ்நாடு, திரிபுரா, உத்தரகாண்ட், உத்தர பிரதேசம், ஜார்கண்ட், சிக்கிம், மத்தியபிரதேசம், மிசோரம் மற்றும் மணிப்பூர் ஆகிய 25 மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் அறிக்கை தாக்கல் செய்துள்ளன.
அதே நேரம் பீகார், அரியானா, இமாசல பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, மேற்குவங்காளம், நாகாலாந்து, டெல்லி, ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் ஆகியவை இன்னும் அறிக்கை தாக்கல் செய்யவில்லை.
இந்த அறிக்கையின்படி தமிழ்நாட்டில் தமிழ்நாட்டில் 157.68 சதுர கி.மீ. வனப்பகுதியும், கேரளாவில் 49.75 சதுர கி.மீ. வனப்பகுதியும் ஆக்கிரமிப்பில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய வனத்துறை அமைச்சகத்தின் அறிக்கையின்படி, இதுவரை 409.77 சதுர கி.மீ. வனப்பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.