June 17, 2026

Seithi Saral

Tamil News Channel

பாராளுமன்றத்தில் வக்ப் வாரிய சட்டத்திருத்த மசோதா தாக்கல்

1 min read

Waqf Board Amendment Bill tabled in Parliament

2.4.2025
வக்ப் வாரிய சட்டத்திருத்த மசோதா, லோக்சபாவில் இன்று (புதன்கிழமை) மதியம், 12:00 மணிக்கு தாக்கல் செய்யப்பட்டடது. எதிர்க்கட்சிகள் இந்த மசோதாவை ஏற்காததால், சபையில் விறுவிறுப்பான விவாதம் நடந்தது.
சமூக நலத்திட்டங்களுக்காக முஸ்லிம்கள் எழுதி வைக்கும் சொத்துக்களை நிர்வகிக்க வக்ப் வாரியம் அமைக்கப்பட்டது; இவை, இதற்கென உருவாக்கப்பட்ட வக்ப் வாரிய சட்டப்படி நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. இந்த சட்டத்தில் சில திருத்தங்களை மத்திய அரசு செய்துள்ளது.
பாராளுமன்ற, குளிர்கால கூட்டத்தொடரில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டபோது, எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. இதைத் தொடர்ந்து கூட்டுக்குழு ஆய்வுக்கு மசோதா அனுப்பி வைக்கப்பட்டது.

பா.ஜ.க, எம்.பி., ஜெகதாம்பிகா பால் கூட்டுக்குழுவுக்கு தலைமை வகித்தார். முஸ்லிம்கள் தரப்பை மளமளவென அழைத்து ஆலோசனை நடத்தி விரைவாக பணிகளை முடித்தார்.
இந்நிலையில் இன்று பாராளுமன்ற மக்களவையில் வக்ப் வாரிய சட்டத்திருத்த மசோதாவை மதியம் 12:10 மணிக்கு, பார்லிமென்ட் விவகாரம் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தாக்கல் செய்தார்.

பின்னர் கிரண் ரிஜிஜூ பேசியதாவது:-
வக்ப் சட்டத்திருத்தத்திற்கு 97 லட்சம் கோரிக்கைகள் பெறப்பட்டு உள்ளது. பாராளுமன்ற வரலாற்றில் வேறு எந்த மசோதாவிற்கும் இவ்வளவு விரிவாக ஆலோசனை நடை பெற்றதில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர்.

லோக்சபாவில் காங்கிரஸ் எம்.பி., வேணுகோபால் பேசியதாவது:
இந்த வக்ப் மசோதாவில் தங்களது கருத்துகளை முன் வைக்க எதிர்க்கட்சிகளுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். நீங்க சட்டத்தையே தகர்க்கிறீர்கள். திருத்தம் செய்ய பல விதிகள் உள்ளன. இதற்கு கருத்து தெரிவிக்க நேரமே அளிக்கவில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.

இதற்கிடையே, சர்ச்சைக்குரிய வகையில் மசோதா அம்சங்கள் இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்தது.
இதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ‘பாராளுமன்ற கூட்டுக்குழு பரிசீலனையில் எதிர்க்கட்சிகள் தங்களின் கருத்துக்களை முன்வைத்துள்ளனர்’ என பதில் அளித்தார்.

வக்ப் வாரிய சொத்துக்களை நிர்வகிக்கும் கவுன்சிலில், பெண்களையும் உறுப்பினராக்குவது, வக்ப் சொத்துக்களின் மீதான பிரச்னைகளில் மாவட்ட கலெக்டரே இறுதி முடிவு எடுப்பது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *