வரி விதிப்பு விவகாரத்தில் அமெரிக்காவுக்கு எதிராக போராட இந்தியாவுக்கு சீனா அழைப்பு
1 min read
China calls on India to fight US on tariff issue
9.4.2025
இந்தியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு அமரிக்கா புதிய வரிகளை விதித்துள்ளது. இதற்கு எதிர்வினை ஆற்றாமல் இந்தியா உள்ளிட்ட நாடுகள் மவுனம் காத்து வரும் சூழலில் சீனா அமெரிக்கா மீது பதிலுக்கு இறக்குமதி பொருட்களுக்கு 34 சதவீதம் வரி விதிப்பதாக அறிவித்தது.
வரும் 10 தேதி முதல் இது அமலுக்கு வரும் எனவும் தெரிவித்தது. இதனால் சூடான டிரம்ப், சீனா உடனைடியாக தனது வரியை திரும்பப்பெறவில்லை என்றால் பதிலுக்கு கூடுதலாக 50 சதவீத வரி விதிப்பேன் என்று மிரட்டினார்.
இந்நிலையில், அமெரிக்க வரிவிதிப்பை எதிர்கொள்ள இணைந்து செயல்படுவோம் என்று இந்தியாவுக்கு சீனா அழைப்பு விடுத்துள்ளது.
இதுதொடர்பாக இந்தியாவில் உள்ள சீனத் தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் யூ ஜிங், எக்ஸ் பதிவில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், “சீனா – இந்தியா பொருளாதாரம், வர்த்தக உறவு, பரஸ்பர நன்மையை அடிப்படையாகக் கொண்டது. அமெரிக்காவின் வரிவிதிப்பை எதிர்கொள்ளும் உலகின் 2 வளர்ச்சியடைந்த நாடுகள் இணைந்து செயல்பட்டு இந்த கடினமான சூழ்நிலையை கடக்க வேண்டும். வர்த்தகம் மற்றும் கட்டணப் போர்களில் வெற்றியாளர்கள் இல்லை. அனைத்து நாடுகளும் விரிவான ஆலோசனையின்படி கொள்கைகளை நிலைநிறுத்த வேண்டும். அனைத்து வகையான ஒருதலைப்பட்சம் மற்றும் பாதுகாப்புவாதத்தை கூட்டாக எதிர்க்க வேண்டும்” என்று தெரிவித்தார்.