தென்காசியில் நியாய விலை கடை பணியாளர்கள் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்
1 min read
Fair price shop workers in Tenkasi protest wearing black shirts.
9.4.2025
தென்காசியில் அரசு நியாய விலை கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்து கருப்பு சட்டையை அணிந்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்து கருப்பு சட்டை அணிந்து மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தென்காசி மாவட்டம் குத்துக்கல்வலசை பகுதியில் மாவட்டத் தலைவர் முருகன் தலைமையில் மாநிலத் துணைத் தலைவர் காளிராஜ் பாண்டியன் முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது நியாய விலை கடைகளில் விரல் ரேகை பதிவு ஆதார் சரிபார்ப்பு 40 சதவீதம் மீண்டும் நடைமுறைப்படுத்துதல், இணையதள சேவையை மேம்படுத்துதல், டிஎன்சிஎஸ்சி எடை தராசு அவ்வலுலக கணினியும் இணைத்து ரசீது வழங்கிய பின்பு நியாய விலை கடை தராசும் பி எஸ் ஓ விற்பனை முனையத்துடன் இணைக்க வேண்டும்.
பொது விநியோகத் திட்டத்திற்கென தனித்துறை உருவாக்க வேண்டும், சரியான எடையில் தரமான பொருட்களை பொட்டலமாக வழங்கப்பட வேண்டும், நிலுவையில் உள்ள 30 அம்ச கோரிக்கைகளை குறித்து விரிவான பேச்சுவார்த்தை நடத்தி நிறைவேற்ற வேண்டும், கல்வி தகுதிக்கேற்ப ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பியவாறு நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் மாநில பொருளாளர் பொன் அமைதி, தென்மண்டல ஒருங்கிணைப்பாளர் இளங்கோ, வடக்கு மாவட்ட செயலாளர் பரியெறும் பெருமாள், தென்காசி மாவட்ட பொருளாளர் ராஜேந்திரன், தென்காசி மாவட்ட துணை தலைவர் ரெங்கராஜ், திருநெல்வேலி மாவட்ட செயலாளர் ரவிக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.