June 22, 2026

Seithi Saral

Tamil News Channel

ஹரிராம் சேட் பற்றிய புத்தகம் வெளியீட்டு விழா

1 min read

Book launch ceremony on Hariram Chet

12.4.2025
தென்காசி மாவட்டம் முக்கூடலில் கொடைவள்ளல் கருணை திரு ஹரிராம் சேட் பற்றிய புத்தக வெளியீட்டு விழா 13.04.2025 காலை 09.30 மணி அளவில் நடைபெற உள்ளது.

வரலாற்று ஆய்வாளர் நெல்லை
செ.திவான் எழுதிய கொடை வள்ளல் கருணை திரு அரி ராம் சேட் அவர்களின் புத்தக வெளியீட்டு விழா விற்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டி எஸ் ஏ சிவப்பிரகாசம் தலைமை தாங்குகிறார்.முக்கூடல் பேரூராட்சி மன்ற தலைவர் ராதா லட்சுமணன் முன்னிலை வகிக்கிறார். முக்கூடல் த.பி சொக்கலால் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர்
ஆ.காண்டீபன் அனைவரையும் வரவேற்று பேசுகிறார்.

இந்த நூலை நெல்லை பாராளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் சி ராபர்ட் புரூஸ் வெளியிட்டு நூலாசிரியர் செ. திவானை கௌரவிக்கிறார். இந்த நிகழ்ச்சியில் ஆவுடையானூர் டாக்டர் சி தர்மராஜ், நூலை பெற்றுக் கொள்கிறார். திமுக துணை பொதுச்செயலாளர் வழக்கறிஞர்
திருமலாபுரம் தி மு.இராசேந்திரன் கொடை வள்ளல் குடும்பத்தினரை கௌரவித்து நூல் மதிப்புரை செய்கிறார். அதனைத் தொடர்ந்து நூலாசிரியர் வரலாற்று ஆய்வாளர் செ.திவான் ஏற்புரை நிகழ்த்துகிறார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக டி.பி.எஸ்.எச் பார்த்திபன் ராம்சட் டி.பி.எஸ் .எச் கதிரேஷ் ராம்சேட் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

இந்த நிகழ்ச்சியில் மதிமுக மாவட்ட செயலாளர் இராம உதயசூரியன், மதிமுக மாநில சட்டத்துறை துணைச் செயலாளர் வழக்கறிஞர் ம.சு.சுதர்சன், மதிமுக தலைமை தணிக்கை குழு உறுப்பினர் சுரண்டை சு.இராமகிருஷ்ணன், தோரணமலை முருகன் கோவில் தர்மகர்த்தா ஆ. செண்பக ராஜன், பாப்பாக்குடி ஒன்றிய திமுக செயலாளர் மாரிவண்ணமுத்து, முக்கூடல் பேரூராட்சி துணைத் தலைவர் இரா. லட்சுமணன்,
கே.டி.கோசல் ராம் நற்பணி மன்ற தலைவர் பொன்னுச்சாமி, இந்து நாடார் சமுதாய தலைவர் பொன்னரசு, நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரவிய சுப்பிரமணியன், வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் டி தினகரன், பாப்பாக்குடி ஒன்றிய மதிமுக செயலாளர் பாலமுத்து கணேஷ், சிங்கம்பாறை திருத்தல அதிபர் அருள் நேசமணி, பாப்பாக்குடி ஊராட்சி தலைவர் ஆனைக்குட்டி பாண்டியன், நகர மதிமுக செயலாளர் எம்.கணபதி,
சி.பி.எம் கே.மாரி செல்வம், அதிமுக சார்பில் ஆர்.எஸ் .தில்சன், முக்கூடல் பகிரதன், சி.பி.எம்.அருணாசலம், முக்கூடல் பரமசிவன், மதிமுக மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் மா.மாடசாமி, கவிஞர் பாப்பாக்குடி இரா செல்வமணி, முக்கூடல் டெல்லிராம், தமிழ் செம்மல் முருகன், வாகை முத்தழகன், வினோத்குமார், பொன்ராஜ், மோகன்லால், ஆறுமுக பூபதி, நவமணி, கதிரேசன், காசி முருகேசன், ஆகியோர் கலந்து கொள்கின்றனர். முடிவில் நெல்லை ரெப்கோ வங்கி இரா.முருகேசன் அனைவருக்கும் நன்றி கூறுகிறார்.

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முக்கூடல் புஷ்பம் நினைவு மருத்துவமனை மற்றும் ஹரிராம் சேட் நற்பணி மன்றம், ஹரிராம் சேட் அன்னதான கமிட்டி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *