June 14, 2026

Seithi Saral

Tamil News Channel

குற்றாலம் அருகே கொலை குற்றவாளிகள் 4  பேர் குண்டர் சட்டத்தில் கைது 

1 min read

4 murder suspects arrested under the Gangster Act near Courtallam

3.5.2025

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகே கொலை வழக்கின் குற்றவாளிகள் நான்கு பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.

தென்காசி மாவட்டம், தென்காசி காவல்  நிலைய எல்லைக்குட்பட்ட கீழப்புலியூரில் கடந்த 16.04.2025 அன்று பட்டப்பகலில் மனைவி கண்முன்னே கணவனை கொலை செய்து தலையை துண்டித்து எடுத்துச் சென்ற வழக்கில் கைது செய்யப்பட்ட  குற்றவாளிகளான காசிமேஜபுரம் வல்லப விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த ராமையா என்பவரின் மகன் செண்பகம் (வயது43), கணேசன் என்பவரின் மகன் ராமசுப்பிரமணியன்(எ) ரமேஷ் (வயது 25),  மணிகண்டன் என்பவரின் மகன் ஹரிஹரசுதன் (வயது 24) மற்றும் குற்றாலம் குடியிருப்பு தெற்கு தெருவை சேர்ந்த ராஜ் என்பவரின் மகன் மணிகண்டன் (எ) புறா மணி (வயது 32) ஆகியோர் உடனடியாக கைது செய்யப்பட்டு நான்கு பேர்களும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மேற்படி நான்கு குற்றவாளிகள் மீதும் பிரிவு 14 ன்படி தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.அரவிந்த்  பரிந்துரையின் பேரில், தென்காசி மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல் கிஷோர் உத்தரவின் பேரில் நான்கு நபர்களும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் எஸ்.அரவிந்த் தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *