மணிமுத்தாறு அணையில் தண்ணீர் திறப்பு
1 min read
Water released into Manimutharu Dam
4.5.2025
திருநெல்வேலி மாவட் டம் அம்பாசமுத்திரம் தாலுகா மணிமுத்தாறு அணையிலிருந்து பெருங்கால் பாசன கார் பருவ சாகுபடிக்கு மாவ ட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் இரா.சுகுமார், தண்ணீர் திறந்து வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் அம்பாசமுத்திரம் வட்டம், மணிமுத்தாறு அணையிலிருந்து பெருங்கால் பாசன கார் பருவசாகுபடிக்கு தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து மணிமுத்தாறு அணையி லிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. பெருங்கால் கால்வாய் மணிமுத்தாறு ஆற்றின் தலை அணைக்கட்டிலிருந்து பிரிகிறது. மணிமுத்தாறு மேற்கு தொடர்ச்சிமலையின் கிழக்கு சரிவி லிருந்து உற்பத்தியாகிறது. மணிமுத்தாறு அணைகட்டப்பட்ட பிறகு பெருங்கால் கால்வாயின் தலைமதகு மணிமுத்தாறு அணையிலேயே கட்டப் பட்டது (அதாவது இந்தகால் வாயின் 2 மைல் 2 பர்லாங்கு நெடுகையில்) தலை மதகிலிருந்து வரும் கால்வாய் சுரங்க ப்பாதைவழியாக 64மீ தூரம்
செல்கிறது.
பின்னர் ஒரு திறந்த வெளி கால்வாயாக. செல்கிறது. இக்கால்வாயின் அதிகபட்ச வெளியேற்றதிறன் 90 கனஅடி இக்கால்வாயின் 42 மதகுகளின் மூலம் 1280.65 ஏக்கர் நேரடி ஆயக்கட்டு பாசனமும், 30 குளங்கள் வாயிலாக 1381.82 ஏக்கர் மறைமுக ஆயக்கட்டு பாசனமும் பயன் பெறு கிறது. இக்கால்வாய் 7.725 கி.மீ. தூரத்திற்கு இயங்குகிறது. இக்கால்வாயின் ஆயக்க ட்டு பரப்புகள் அம்பாசமுத்திரம் தாலுகாவில் உள்ள ஜமீன் சிங்கம்பட்டி, அயன்சிங்கம்பட்டி வைராவிகுளம், தெற்கு பாப்பான்குளம், மற்றும் தெற்கு கல்லிடைக்குறிச்சி, ஆகிய பகுதிகளில் அமைந்துள்ளன
மணிமுத்தாறு அணையிலிருந்து 2025 ஆம் ஆண்டு பெருங்கால் பாசனகார் பருவசாகுபடிக்காக நேரடி மற்றும் மறைமுக பாசன பகுதிகளு க்கு 01.05.2025 முதல் 28.05.2025 வரை 120 நாட்களுக்கு நீர் இருப்பு மற்றும் நீர் வரத்தினை பொறுத்து தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதன் மூலம் அம்பாசமுத்திரம் தாலுகா பகுதியை சார்ந்த ஜமீன்சிங்கம்பட்டி, அயன்சிங்கம்பட்டி, வைராவிகுளம், தெற்கு பாப்பான்குளம், தெற்கு கல்லிடைகுறிச்சி, ஆகிய பகுதிகளில் சுமார் 2756.62 ஏக்கர் பாசனபரப்பு பயன்பெறும் ஆயக்கட்டு பகுதிகளில் உள்ள விவசாய பெருமக்கள் கார் பருவசாகுபடிக்காக தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தவும். நீர் விநியோகபணியில் நீர்வளத்துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.
இந்நிகழ்ச்சியில் செயற் பொறியாளர் வசந்தி, உதவி செயற்பொறியாளர்கள் தங்க ராஜன் முருகன் வேளா ண்மை இணை இயக்குநர் வெங்கடேசன், உதவி இயக்கு நர் பேரூராட்சிகள் வில்லிய ம்ஸ் ஜேசுதாஸ் உதவிபொறி யாளர்கள் ராம் சூர்யா தினேஷ், மணிகண்டன், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் ஆ.பிரபாகரன், அம்பாசமு த்திரம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பரணி சேகர் கல்லிடைக்குறிச்சி பேரூராட்சி துணைத் தலைவர் இசக்கி பாண்டியன், மணிமுத்தாறு பேரூராட் சிதலைவர் அந்தோணியம் மாள், சேரன்மகாதேவி ஒன்றிய சேர்மன் பூங்கோதை குமார், சேரை கிழக்கு ஒன்றிய செயலாளர் முத்துப்பாண்டி, மேற்கு ஒன்றிய செயலாளர் முத்து கிருஷ்ணன்,
மாவட்ட விவசாய அணி துணை தலைவர் மாவட்ட பிரதிநிதி வைராவிகுளம் எஸ்.பாபநாசம் மாவட்ட பிரதிநிதி கல்லிடைக்குறிச்சி பீர் முகைதீன், விவசாய சங்க பிரதிநிதிகள் தெற்கு பாப்பான்குளம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் திமுக மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளருமான என்.எஸ் ஆறுமுகம், பூத பாண்டியன், சட்டநாதன், குமார், வேம்பு, வைராவிகுளம் ஆண்டி, ஆர் எஸ் குமரன், இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளர் வேல்முருகன், அம்பை ஒன்றிய அமைப்பாளர் முருகையா பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.