எல்லையோர மாநில முதல்- மந்திரிகளுடன் அமித்ஷா ஆலோசனை
1 min read
Amit Shah holds talks with Chief Ministers of border states
7.5.2025
இந்த தாக்குதலுக்கு ‘ஆபரேஷன் சிந்தூர்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் நடவடிக்கையின்போது எல்லையில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது துல்லிய தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை அடுத்து எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது . இந்த நிலையில் எல்லையோர மாநில முதல்- மந்திரிகளுடன் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா ஆலோசனை நடத்தி வருகிறார்.
ஜம்மு காஷ்மீர், குஜராத், பஞ்சாப், ராஜஸ்தான், மேற்கு வங்கம், உத்தரகாண்ட், உத்தரப் பிரதேசம், சிக்கிம் ஆகிய மாநிலங்களின் முதல்- மந்திரிகளுடன் அமித்ஷா அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்..