சத்தீஷ்காரில் 15க்கும் மேற்பட்ட நக்சல்கள் சுட்டுக்கொலை
1 min read
More than 15 Naxals shot dead in Chhattisgarh
7.5.2025
சத்தீஷ்கார் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தில் உள்ள கரேகுட்டா மலை அருகே அமைந்திருக்கும் வனப்பகுதியில் நக்சல்கள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து அந்த பகுதியில் மாவட்ட ரிசர்வ் போலீசார், சி.ஆர்.பி.எப். வீரர்கள், சிறப்பு அதிரடிப்படை வீரர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளை சேர்ந்த பாதுகாப்பு படை வீரர்கள் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அவர்களோடு தெலுங்கானா காவல்துறையினரும் இணைந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
இந்த தேடுதல் பணியின்போது நக்சல்களுக்கும், பாதுகாப்பு படை வீரர்களுக்கும் இடையே துப்பாக்கி சண்டை வெடித்தது. அப்போது நடந்த என்கவுன்ட்டரில் 15க்கும் மேற்பட்ட நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களின் உடல்கள் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து அந்த பகுதியில் பாதுகாப்பு படை வீரர்கள் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.