சிந்து நதியில் மீண்டும் தண்ணீர் திறந்த இந்தியா
1 min read
India reopens Indus River
10.5.2025
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக இந்திய அரசு அறிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து செனாப் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாக்லிஹார் மற்றும் சலால் அணைகளின் மதகுகள் அடைக்கப்பட்டன.
இந்த நிலையில் ஜம்மு காஷ்மீரின் ரம்பன் பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக பாக்லிஹார் மற்றும் சலால் அணைகள் நிரம்பி வழிகின்றன. இதனால் வேறுவழியில்லாமல் பாக்லிஹார் மற்றும் சலால் அணை மதகுகள் திறக்கப்பட்டுள்ளன. இதனால் பாகிஸ்தானுக்கு செல்லும் சிந்து நதியில் தண்ணீர் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.