June 5, 2026

Seithi Saral

Tamil News Channel

மணிமுத்தாறு அருவியில் குளிக்க அனுமதி

1 min read

Permission to bathe in Manimutharu Falls

5/6/2025
தென்மேற்குப் பருவமழை கடந்த வாரம் தொடங்கியதை அடுத்து, நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. நெல்லை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மணிமுத்தாறு அருவியில் தற்போது காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

இதனால் பாதுகாப்பு கருதி மணிமுத்தாறு அருவியில் குளிக்க 10-வது நாளாக வனத்துறையினர் தடைவிதித்திருந்தனர். இந்த நிலையில் தற்போது மழை பொழிவு குறைந்துள்ளதை அடுத்து மணிமுத்தாறு அருவியில் 10 நாட்களுக்கு பின்னர் குளிக்க வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர். பல்வேறு மாவட்டங்களிலிருந்து மணிமுத்தாறு அருவிக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளித்து மகிழ்ந்தனர்

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *