இண்டி கூட்டணி கூட்டத்தை புறக்கணிப்பதாக திமுக அறிவிப்பு
1 min read
DMK announces boycott of Indi Alliance meeting
4.6.2026
காங்கிரஸ் பங்கேற்கும் இண்டி கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம் என்று திமுக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது;-
டெல்லி ‘கான்ஸ்டிடியூஷன் கிளப்பில்’ வரும் ஜூன் 8ம் தேதி நடைபெறும் இண்டி கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்திற்கு வருமாறு திமுகவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இண்டி கூட்டணி தொடங்கியதிலிருந்து அக்கூட்டணியின் மையச் சக்தியாக திமுக இயங்கியது. கட்சி தலைவர் ஸ்டாலின் தான் நாட்டு மக்களுக்கான முக்கியப் பிரச்னைகளில் முதன்மைக் குரல் எழுப்பி வந்தார். இது இண்டி கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளும் அக்கூட்டசிகளின் தலைவர்களும் நன்கு அறிவார்கள்.
தமிழகத்தில் நடைபெற்ற சட்டசபை பொதுத்தேர்தலுக்குப் பின், காங்கிரஸ் கட்சி, திமுகவிற்கு இழைத்த துரோகத்தினால் மிகுந்த மனக்காயமுற்றிருக்கும் கட்சித் தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கின்ற வகையில், வருகின்ற ஜூன் 8ம் தேதி டெல்லியில் நடைபெறும் இண்டி கூட்டணிக் கூட்டத்தில், அதாவது காங்கிரஸ் பங்கேற்கும் கூட்டத்தில் திமுக பங்கேற்காது.
இக்கூட்டத்தில் பங்கேற்காத அதேநேரத்தில், இந்தக் கூட்டத்தில் இடம்பெற்றுள்ள மற்ற கட்சிகள் முன்வைக்கும் நாட்டு நலனைப் பாதிக்கும் பிரச்னைகளில், திமுக என்றைக்கும் குரல் கொடுக்கும், இவ்வாறு அவர் கூறினார்.