July 4, 2025

Seithi Saral

Tamil News Channel

புளியரையில் மினிலாரியில் பைக் திருடிய 3 பேர் கைது

1 min read

3 arrested for stealing a bike from a mini-lorry in Puliyarai

9.6.2025
தமிழகத்தில் இருசக்கர வாகனங்களை திருடி கேரள மாநிலத்தில் கொண்டு விற்பனை செய்து வந்த மூன்று திருடர்களை தமிழக போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

தமிழக கேரளா எல்லையான புளியரை பகுதியில் அடிக்கடி இருசக்கர வாகன திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வந்த நிலையில் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
எஸ்.அரவிந்த் குற்றவாளிகளை கைது செய்ய பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து தமிழக கேரள எல்லையான புளியரைப் பகுதியில் மேலும் அதிக அளவிலான சிசிடிவி கேமராக்களை அமைக்க நடவடிக்கை மேற்கொண்டார். மேலும் தமிழகத்தில் இருந்து கேரள மாநிலத்திற்கு செல்லும் இருசக்கர வாகனங்களை தீவிரமாக சோதனை செய்யும் படி உத்தரவிட்டார்.

அதன்படி நேற்று புளியரை பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில் புளியரை காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுபாஷ் சந்திர போஸ் தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். .

அப்போது அந்த வழியாக கேரளாவுக்கு செல்ல முயன்ற ஒரு மினி லாரியை தடுத்து நிறுத்து சோதனை செய்தபோது அந்த வேனில் மூன்று மோட்டார் சைக்கிள்கள் இருப்பதை கண்டுபிடித்தனர்.

உடனடியாக அவர்கள் மூன்று பேரையும் பிடித்து புளியரை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினார்கள். போலீசார் நடத்திய விசாரணையில் அந்த வேலையில் இருந்த மூன்று மோட்டார் சைக்கிள்களும் அந்த பகுதியில் திருடியதும், அதனை கேரள மாநிலத்தில் விற்பனை செய்வதற்காக கொண்டு சென்றதும் தெரிய வந்தது.

மேலும் அவர்கள் கேரள மாநிலம் கொல்லம் அருகே கடைக்கல் தெம்பர்மலை புத்தன்வீடு பகுதியைச் சேர்ந்த ஜான் கென்னடி என்பவரது மகன் அனிஷ் (வயது 33), பீர்மேடு பகுதியைச் சேர்ந்த பாபு ன்பவரது மகன் டின்டோ வர்கீஸ் (வயது 34), கொல்லம் அருகே பாரதி புரம் கொடியோல்வுடு பகுதியைச் சேர்ந்த அப்துல் லத்தீப் என்மவரது மகன் நவ்பல் (வயது 35) என்பது தெரிய வந்தது உடனடியாக அவர்கள் மூன்று பேரையும் கைது செய்த போலீசார் மூன்று மோட்டார் சைக்கிள்கள் மற்றும் அதனை ஏற்றி வந்த மினி லாரியையும் பறிமுதல் செய்தனர்.

அதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட 3 நபர்களையும் போலீசார் செங்கோட்டை
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிபதியின் உத்தரவுபடி சிறையில் அடைத்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.