June 5, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசி, மாவட்டத்தில் 8 காவல் நிலையங்கள் தரம் உயர்வு

1 min read

8 police stations upgraded in Tenkasi district

9.5.2025
தென்காசி மாவட் டத்தில் புளியரை இலத்தூர் உள்ளிட்ட எட்டு காவல் நிலையங்களின் தரம் உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் விரைவில் இந்த காவல் நிலையங்களுக்கு புதிதாக இன்ஸ்பெக்டர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

அதன்படி தென்காசி மாவட்டத்தில் புளியரை, இலத்தூர், ஆய்க்குடி, சாம்பவர்வடக்கரை, வீரகேரளம்புதூர், பாவூர்சத்திரம், ஆழ் வார்குறிச்சி, சொக்கப் பட்டி ஆகிய 8 காவல் நிலையங்களின் தரம் உயர்தப்பட்டுள்ளது. இந்த காவல் நிலையங்களுக்கு விரைவில் தனியாக இன்ஸ்பெக்டர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதனால் இந்த காவல் நிலையங்களில் போலீசார், எஸ்ஐக்கள், சிறப்பு எஸ்ஐக்களின் எண்ணிக்கை அதிகரிக் கப்படும்.

மேலும் நெல்லை மாவட் டத்தில் சீவலப்பேரி, தேவர்குளம், மூன்ற டைப்பு, மூலைக்கரைப் பட்டி, திருக்குறுங்குடி, பழவூர், ராதாபுரம், பாப்பாக்குடி, மணிமுத் தூறு, பத்தமடை, முக் கூடல் ஆகிய 11 (லைட் ஸ்டேஷன்) காவல் நிலையங்கள் (ஹைவி ஸ்டேஷன்) தரம் உயர்த் தப்பட்டுள்ளன. இந்த காவல் நிலையங்களில் தனியாக இன்ஸ்பெக் டர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

இதில் தூத்துக் குடி மாவட்டத்தைப் பொருத்தவரை தட் டப்பாறை, புதியம்புத் தூர், குரும்பூர், சாயர் புரம், கொப்பம்பட்டி, நாலாட்டின் புத்தூர், சூரன்குடி, குளத்தூர், தருவைகுளம், சங்கர லிங்கபுரம், எப்போ தும்வென்றான், புதூர், மெஞ்ஞானபுரம் ஆகிய 13 காவல் நிலையங்கள் தரம் உயர்த்தப்பட்டு உள்ளன. இதையடுத்து இக்காவல் நிலையங்க ளில் தனியாக இன்ஸ் பெக்டர்கள் நியமிக்கப் பட உள்ளனர்.இதற்கான உத்த ரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *