சத்தீஸ்கரில் நடந்த குண்டுவெடிப்பில் ஏ.எஸ்.பி. பலி
1 min read
A.S.P. killed in blast in Chhattisgarh
9.6.2025
சத்தீஸ்கரில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் பாதுகாப்பு படையினர் சிலர் காயம் அடைந்துள்ளனர் என ஐ.ஜி., சுந்தர்ராஜ் தெரிவித்து உள்ளார். இந்த குண்டு வெடிப்பில் ஏ.எஸ்.பி.,
ஆகாஷ் ராவ் உயிரிழந்தார்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள கோண்டா- எரபோரா சாலையில் டோண்ட்ரா அருகே நக்சலைட்டுகள் புதைத்து வைத்திருந்த வெடிகுண்டு வெடித்தது. இதில் சுக்மா மாவட்டத்தின் ஏ.எஸ்.பி., ஆகாஷ் ராவ் பலத்த காயமடைந்தார். பின்னர் அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார்.
மேலும் குண்டுவெடிப்பில் பாதுகாப்பு படையினர் சிலர் காயம் அடைந்துள்ளனர் என ஐ.ஜி., சுந்தர்ராஜ் தெரிவித்து உள்ளார். சத்தீஸ்கர் துணை முதல்வர் விஜய் சர்மா கூறியதாவது:கோண்டா-எரபோரா சாலையில் உள்ள டோண்ட்ரா அருகே குண்டி வெடிப்பில் ஏ.எஸ்.பி., ஆகாஷ் ராவ் பலத்த காயமடைந்து, தனது உயிரை தியாகம் செய்துள்ளார்.
அவர் ஒரு துணிச்சலானவர். அவர் பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். இது எங்களுக்கு ஒரு சோகமான தருணம். பதுங்கி இருக்கும் நக்சலைட்டுகளை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.